சின்னத்திரை விஜே பிரியங்கா தேஷ்பாண்டே தனது வாழ்க்கையில் அம்மா அப்பா தம்பி என 3 பேருக்கும் உரிமை உள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியின் தற்போது இருக்கும் பெண் விஜே பிரியங்கா. கலகலப்பான சிரிப்புடன் நிகழ்ச்சியை தொகுத்து வழக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் விஜய் டிவியில் தற்போது இருக்கும் ஒரே பெண் தொகுப்பாளினி இவர்தான் என்பது கூடுதல் சிறப்பு.
ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே, தனது வாழ்க்கையில் அப்பா அம்மா தம்பி ஆகிய மூவருக்கும் உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், சின்னத்திரையில் தனக்கு வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். ஒவ்வொரு தொகுப்பாளருக்கும் விஜய் டிவியில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு சன்டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றிவிட்டு தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கடைசி வாரத்தில் இங்கிருந்து என்ன எடுத்துக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டனார், நான் எனக்கு எந்த துன்பம் வந்தாலும் தனியாகத்தான் ஃபீல் பண்ணுவேன் மற்றவர்களிடம் அதை காட்டிக்கொள்ள மாட்டேன். அதேபோல் என்னுடன் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
அதேபோல் எனது வாழ்க்கையில் ஸ்கூல் படிக்கும்போது நான் அதிகமாக முடி வளர்த்தது கிடையாது. எனது அப்பா இறந்த பிறகுதான் நான் முடி வளர்த்தேன். அப்பா மிலிட்டரி ஸ்கூலில் படித்ததால் அப்படி ஒரு கண்டிஷன் வைத்திருந்தார். என் தம்பிக்கும் எனக்கும் ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல்தான் வைத்திருப்பார். ஆனால் எங்க அப்பா இறந்த பிறகு என் அம்மாவை பார்க்க பார்க்க நான் எதற்கும் பயப்பட கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்.
அன்று கற்றுக்கொண்டது தான் இன்று என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. நான் வளர்ந்து வந்தபோது எனக்கு அட்வைஸ் செய்து சொல்லித்தர யாருமே இல்லை. அதனால் எனது வாழ்க்கையில் அப்பா அம்மா தம்பி ஆகிய மூவருக்கும் பெரிய உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil