பிக் பாஸ் பிரியங்கா கல்யாண போட்டோஸ்: இப்போ இதை ஏம்பா வைரல் ஆக்குறீங்க!

Tamil Television Update : விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil TV Anchor Priyanka Deshpande Wedding Photo Viral : விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள நிலையில், அவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், அச்சம் தவிர் ஜோடி நம்பவர் ஒன் சவுண்ட் பார்ட்டி முரட்டு சிங்கிள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா டேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மட்டுமல்லாது இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

2009-ம் ஆண்டு ஜீ தமிழின் தி சிற்பி கேர்ள் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய பிரியங்கா தற்போது தமிழ் சின்னத்திரையின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக உள்ளார். மேலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா தனது நிகழ்ச்சிகள் மற்றும் தான் வெளியில் செல்லும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் போட்டியாளராக களமிறங்கியுள்ள அவர், பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களை கடந்துள்ளார். இந்நிலையில், பிரியங்காக கடந்த 2016ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது திடீரென பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தனது வாழ்வியல் குறித்து பேசிய அவர், தனது அம்மா மற்றும் தம்பியை பற்றி மட்டுமே அதிகம் பேசியிருந்தார். மேலும் பிரியங்கா தான் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சிகளில், தன் கணவரைக் கலாய்த்து பலமுறைப் பேசியிருந்தாலும்,  அவர் குறித்து புகைப்படமோ அல்லது அவர் குறித்து தகவலோ இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் ரசிகர்கள் பிரியங்காவின் திருமண புகைப்படத்தை தேடி எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil tv anchor and bigg boss contestant priyanka wedding photos viral

Next Story
பைக்-ல் இருந்து விழுந்த நடிகை… சன் டிவி டாப் டி.ஆர்.பி சீரியலுக்கு வந்த சோதனை!chaitra reddy Tamil News: kayal serial actress chaitra got bike accident
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com