தொடக்கத்தில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை அறிந்து வாரத்தில் 6 நாட்கள் சீரியல்களும் ஒரு நாள் ரியாலிட்டி ஷோக்களும் ஒளிரப்பாகி வந்தது. ஆனால் தற்போது சீரியல்கள் குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவதால் இனி வாரம் முழுவதும் (7 நாட்களும்) சீரியல்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொழுபோக்குக்காக டிவி பார்க்கும் காலம் போய் தற்போது டிவி பார்ப்பதற்ககாகவே இருக்கும் அனைத்து வேலைகளையும் சீக்கிரம் முடிக்கும் மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பது தான் உண்மை. அதிலும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டிவி சீரியல்களை பார்பதற்காக அவர்கள் தங்களுக்கு இருக்கும்வேலைகளை சீக்கிரம் முடிப்பதும், சீரியல் சேரத்தில் வேலை இருந்தால் அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சீரியல் பார்க்க அமைவதும் இப்போது அதிகம் நடந்து வருகிறது.
இதன் காரணமாகத்தான் முன்பு 5 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த டிவி சீரியல்கள் தற்போது சனிக்கிழமையும் சேர்த்து வாரத்தில் 6 நாட்கள் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க பல முயற்சிகளில் டிவி சேனல்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாகவும், சீரியல் மக்களின் இன்றியமையாத பொழுபோக்காக மாறிவிட்டது என்பதற்காகவும், தற்போது ஒரு புதிய முடிவு வெளியாகியுள்ளது.
அதன்படி இதுவரை 6 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த டிவி சீரியல்கள் தற்போது வாரத்தில் 7 நாட்களும் ஒளிரப்ப சன்டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல்கட்டமாக 2 சீரியல்கள் மட்டுமே 7 நாடகளும் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக கயல் எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் நல்ல டிஆர்பி ரேட்டிங்கை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியல்களை 7 நாட்களும் ஒளிரப்ப முடிவு செய்துள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாக ஒளிபரப்பாகும் ஞாயிற்றுக் கிழமையிலும் எதிர்நீச்சல் சீரியல் மற்றும் அன்பே வா என இரண்டு சீரியல்களையும் வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது. 6 நாட்கள் வந்த சீரியல் ஞாயிற்று கிழமை மட்டும் ப்ரியாக இருந்தது. அதற்கு இப்போது சீரியலை கொண்டு வந்துவிட்டார்களா? இனி ஞாயிற்றுக்கிழமை ரிமோட்க்கு பல வீடுகளில் சண்டைதான் என்று நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“