Advertisment

டி.ஆர்.பி ரேட்டிங்; டாப் 5-ல் சன் டிவி சீரியல்களின் ஆதிக்கம்

தமிழ் சேனல் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்; டாப் 10 இடங்களில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள்

author-image
WebDesk
New Update
Sun tv and Vijay Tv Serial YTRP

தமிழ் சேனல் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்; டாப் 10 இடங்களில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் நிலவரம் என்ன என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

Advertisment

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த சேனல்களுக்கு இடையே டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டி.ஆர்.பி.,யில் சரிவடைந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் 15வது வாரத்திற்கான டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களை பற்றி இப்போது பார்ப்போம்.

முதலிடத்தை சிங்க பெண்ணே 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்தது. இந்த வாரமும் 9.02 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

இரண்டாம் இடத்தில் கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 8.91 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாம் இடத்தை பிடித்த எதிர்நீச்சல் 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் 8.27 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

4 ஆவது இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7.21 புள்ளிகளைப் பெற்று 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

5 ஆவது இடத்தில் வானத்தைப்போல 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 7.55 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்துள்ளது.

6 ஆவது இடத்தை தக்கவைத்த இனியா 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 6வது இடத்தில் இருந்தது. இந்த வாரம் 7.22 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது.

7 ஆவது இடத்தில் தொடரும் சுந்தரி 2 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 7வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 6.74 புள்ளிகள் பெற்று 7வது இடத்தை தக்க வைத்துள்ளது.

8 ஆவது இடத்தை பிடித்த பாக்கியலட்சுமி 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை 6.56 புள்ளிகள் பெற்று 8வது இடத்தை பிடித்துள்ளது.

9 ஆவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் இந்த முறை 5.87 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்துள்ளது.

10 ஆவது இடத்தில் சின்ன மருமகள் 

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல். கடந்த வாரத்தில் 5.60 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv sun tv serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment