அட… நம்ம ராதிகா சரத்குமார் ஸ்கூல் சீருடையில்!

ராதிகாவை பள்ளிச் சீருடையில் பார்த்து இருக்கீங்களா? இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது. கண்டு மகிழுங்கள்.

By: May 30, 2020, 2:55:27 PM

Tamil TV News: கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாதங்களாக இல்லை. இதனால், தொலைக்காட்சிகள் சீரியல்கள், நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்யத் துவங்கின. ஜெயா தொலைக்காட்சியும் அதிகப்படியாக கைவசம் வைத்திருந்த நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது.

எலெகண்ட் பார்வதி நாயர், சார்மிங் சாக்‌ஷி அகர்வால்: புகைப்படத் தொகுப்பு

இதில் ஆட்டோகிராப், ஆல்பம் போன்ற நிகழ்ச்சிகள் விஐபி-க்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆல்பம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் பெப்சி உமா. ஆட்டோகிராப் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் நடிகை சுகாசினி. இரண்டுமே ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. சுகாசினியால் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க முடியும் என்று சொன்னவர் ஜெயலலிதா. சுகாசினி முதன் முதலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் ஜெயா தொலைக்காட்சிக்குத் தான். பேசும்படம் என்று ஒரு நிகழ்ச்சியை ஜெயா டிவி துவங்கிய ஆரம்ப காலம் முதல், பல வருடங்கள் தொகுத்து வழங்கி வந்தார் சுகாசினி.

நடிகை ஸ்ரீதேவி, இங்லீஷ் விங்லீஷ் படத்தில் நடித்து, அந்த படம் வெளியாகி இருந்த சமயம், ஸ்ரீதேவியை வைத்து பேசும்படம் நிகழ்ச்சியில் ஒரு அருமையான நேர்காணலை தொகுத்து வழங்கி இருந்தார் சுகாசினி. இப்படி இவர் பல விஐபிக்கள் நேர்காணல் செய்த நிகழ்ச்சி பேசும்படம். இதற்கு அடுத்து, ஆட்டோகிராப் என்று ஒரு நிகழ்ச்சியை வழங்கி வந்தார். அதில் ஒரு ஷோவில் நடிகை ராதிகா கலந்து கொண்டு பேசி இருக்கார். நிகழ்ச்சியில் ராதிகா பற்றி அவரது தங்கை நிரோஷா, கணவர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் பேசி இருக்கின்றனர். முக்கியமாக அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் பாடலுக்கு ராதிகாவின் அபிநயத்தை பாருங்கள். அதோடு, ராதிகாவை பள்ளிச் சீருடையில் பார்த்து இருக்கீங்களா? இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது. கண்டு மகிழுங்கள்.

மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு – விசாரணை மும்முரம்

ஆல்பம் நிகழ்ச்சியில் நடிகர் ராம்கி ‘பிரியாணி’ படத்தில் நடித்து முடிந்த கையோடு கலந்துக்கொண்டு, பேசி இருக்கார். இவர் நிகழ்ச்சியிலும் நடிகர் விவேக், இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகை நிரோஷா உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு ராம்கி குறித்து பேசி உள்ளனர். இதை நாளை மதியம் 12 மணிக்கு ஜெயா டிவியில் காணலாம். நடித்துக்கொண்டு இருக்கும்போதே 12 வருட இடைவெளி ஏன்? நடுவில் என்னசெய்தார், ராம்கியின் இளமை அப்படியே இருப்பது எப்படி என்கிற கேள்விகளுக்கு எல்லாம் விடை அளிக்கிறார் ராம்கி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil tv news jaya tv album autograph suhasini raadhika sarathkumar ramki

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X