Jaya TV, Autograph: நடிகை பானுப்பிரியா ஜெயா டிவியின் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சுகாசினி பானுப்பிரியவிடம் பல கேள்விகளை கேட்டார். பானுப்பிரியாவும் தனது நிகழ்வுகளை அப்போது சுகாசினியுடன் பகிர்ந்துக் கொண்டார்.
‘சென்னையில் ஊரடங்கு தீவிரமாகும் என்பது தவறான தகவல்’ – முதல்வர் பழனிசாமி
பள்ளியில் டீச்சர் முதற்கொண்டு மாணவிகள் வரை, பானுப்பிரியவை மங்கா பானு என்று கூப்பிடும் அளவுக்கு சுட்டித் தனமாக இருந்தாராம். அம்மா தன்னை மிகவும் என்கரேஜ் செய்து நடிக்க வைத்தார் என்றும் கூறினார். பானுப்பிரியவை பற்றி கூறும்போது, உடலமைப்பில் ஸ்ரீதேவி போலவும், தலை முடி அழகு கே.ஆர். விஜயா மாதிரியும், கண்கள் ஸ்ரீவித்யா மாதிரியும், டான்சில் பத்மினி போலவும், புடவை கட்டி நிற்க வைத்தால் கம்பீரமாக சுஜாதா மாதிரியும் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தால், இயக்குநருக்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு பெண்தான் நடிகை பானுபிரியா என்று கூறினார்.
நடிகை பானுப்ரியா கலந்துக்கொண்ட ஆட்டோகிராப் https://t.co/6vUmY1lqXL#Bhanupriya #Autograph #Suhasini #JayaTVRewind #JayaTVThrowback
— Jaya TV (@JayaTvOfficial) June 12, 2020
நடிகர் சிரஞ்சீவி சுகாசினி, பானுப்பிரியா இவர்களை நிறைய கலாய்ப்பாராம். ஆனால், அவர் ஸ்ரீதேவியுடன் நடிக்கும்போது பயந்து பயந்து உங்க கையைப் பிடிச்சுக்கவா, இப்படி உங்களைத் தொடலாமா என்று கேட்டு கேட்டு நடிக்கிறார் என்று சுகாசினியிடம் வந்து பானுப்பிரியா சொன்னாராம். அதை சுகாசினி நினைவு கூர, தனக்கு நினைவில்லை என்று கூறினார் பானுப்பிரியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று நிறைய படங்களில் நடித்து இருக்கார் பானுப்பிரியா. இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் எந்த கிசு கிசுவிலும் சிக்காமல் இருந்தவர் என்றும் சுகாசினி கூறினார்.
சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
ராதா, அம்பிகா மாதிரி சகோதரிகள் இருவரும் நடித்து புகழ் பெற்று இருந்த மாதிரி, இவரும் இவரது தங்கை சாந்திப் பிரியாவும் சகோதரிகளாக இருந்து திரைத்துறையில் ஜொலித்தவர்கள். தங்கை சாந்திப்பிரியா செண்பகமே… செண்பகமே பாடல் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர். ராமராஜன் புகழின் உச்சியில் இருந்தபோது, இவர் அந்த படத்தில் சேர்ந்து நடித்து புகழடைந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”