Tamil TV News: ஜெயா டிவியின், ‘உள்ளே வெளியே’ நிகழ்ச்சியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்துக்கொண்டு பேசினார். ஜெயா டிவி, இயக்குநர்கள் மற்றும் பிரபலங்களை வைத்து ‘உள்ளே வெளியே’ என்று ஒரு நிகழ்ச்சியை வழங்கி வந்தது. இப்போது கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. அதன்படி பாரதிராஜா நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள, இவரை நேர்காணல் கண்டவர் மாலா மணியன்.
இந்த மாற்றம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.. ஐசிஐசிஐ அதிரடி!
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புக்கள் என்று ஹாட்ரிக் வெற்றி கண்டது குறித்து பாரதிராஜா பகிர்ந்துக்கொண்டார். வெள்ளித் திரைக்கு கிடைத்த ஒரு அழகான நாயகன் கமல்ஹாசன். அவரை எப்படி தைரியமாக சப்பாணி கேரக்டரில் நடிக்க வைத்தீர்கள் என்று மாலா மணியன் கேட்டபோது, அது கமலின் அட்வான்ஸ்ட் மைண்ட் என்று சற்றும் யோசிக்காமல் பதில் அளித்தார் பாரதிராஜா. பாரதிராஜாவுடன் நடிகை ராதா மும்பையில் இருந்து போனில் பேசினார்.
இதே போல நிழல்கள் படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நிழல்கள் ரவி, தொலைபேசியில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். நிழல்கள் பட அடைமொழியோடு தான், இன்றும் மக்களால் பேசப்படுவதற்கு நீங்க தான் காரணம் என்று அவர் கூற, விதை போட்டது நான் வேர் விட்டு வளர்ந்தது நீங்கள் தான் என்று பாரதிராஜா பதில் சொன்னார்.
2001-க்குப் பிறகு பாகிஸ்தான் தூதரக பலத்தை பாதியாகக் குறைக்கிறது இந்தியா
இயக்குநர் பாரதிராஜா பங்குபெற்ற “உள்ளே வெளியே” நிகழ்ச்சி… உங்கள் ஜெயா டிவியில்… இன்று இரவு 8 மணிக்கு… #UlleyVelliye #JayaTV #Director #Bharathiraja pic.twitter.com/9e1XxzQ1xk
— Jaya TV (@JayaTvOfficial) June 23, 2020
நடிகை ரேகா போனில் தொடர்புக்கொண்டு, ஜெனிஃபர் டீச்சருக்குப் பிறகு நிறைய டீச்சர் வந்துட்டாங்க. உங்களுக்கு பிடிச்ச டீச்சர் யார்னு கேட்டபோது, ஜெனிஃபர் டீச்சர்தான் என்று அழுத்தமாக பதில் சொன்னார் பாரதிராஜா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”