Nisha Ganesh Venkatraman : கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் தொலைக்காட்சிகளில் சில விளம்பரங்களுக்கு மட்டுமே மவுசு இருந்து வருகிறது. அதில் சோப்பு விளம்பரம், டெட்டால், லைஸால் போன்ற தரையை சுத்தப்படுத்தும் விளம்பரங்கள் அடங்கும். அதோடு வாஷிங் பொருட்கள் விளம்பரங்கள், வழக்கமான சாப்பாட்டு பொருட்களின் விளம்பரங்கள் போன்றவைகளும் ஒளிபரப்பாகின்றன. இந்த நேரத்தில் லைஸால், லாக்டவுன் நேரத்தில் சின்னத்திரை நடிகை நிஷா மற்றும் அவரது கணவர் கணேஷ் வெங்கடராமன் இருவரையும் வைத்து சிம்பிளாக விளம்பர படம் ஒன்றை ஷூட் செய்து வெளியிட்டு உள்ளது.
காயத்ரியின் விர்ச்சுவல் ஃபோட்டோ ஷூட், ஐஸ்வர்யாவின் குவாரண்டைன் டைம் : படத் தொகுப்பு
நிஷா, கணேஷ் வெங்கட்ராமன் இருவரும் வேந்தர் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். நிஷா முன்னதாக சன் தொலைக்காட்சியின் சன் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். அம்மாவின் வேலை காரணமாக இந்தியாவின் பல ஊர்களிலும் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார் நிஷா. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களின் பழக்க வழக்கங்கள் பற்றி நன்கு அறிய முடிந்ததாகவும் கூறினார்.
நிஷாவுக்கு, பல நாடுகளுக்கு சென்று பயணம் செய்து வருவதில் அலாதி பிரியம் உண்டு என்று கூறுகிறார். சுடிதார் போன்ற உடைகளை விட நீண்ட கவுன்கள் அணிவது தனக்கு ரொம்பவும் பிடித்தது என்றும் கூறி இருக்கார். புடவைகள் அணிவதும் தனக்குப் பிடித்தமான ஒன்று என்றாலும், முக்கியமான நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு நீண்ட கவுன் தான் தனது ஃபேவரைட் என்றும் கூறுகிறார். தன்னையும் அறியாமல் தான் எடுக்கும் உடைகளில் வெள்ளை கட்டாயம் அமைந்துவிடும். தான் தவிர்க்க நினைத்தாலும் தன்னுடைய உடைகளில் வெண்மை வந்து ஒட்டிக்கொள்ளும் என்று கூறும் நிஷா கணேஷ் தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை கடந்த வருடம் பிறந்தது. சுத்தப்படுத்தும் பொருள் விளம்பரத்துக்கு கணேஷ் வெங்கட்ராம் நடித்து வந்த நிலையில், லாக்டவுன் நேர புது விளம்பரமாக நிஷா, கணேஷ் வெங்கடராமன் தம்பதி நடித்த எளிமையான விளம்பரம் நன்றாக இருக்கிறது.
பிக்பாஸ் முதல் சீசனில் எதைப் பற்றியும் கண்டுக்கொள்ளாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று பிக்பாஸ் வீட்டினுள் இருந்தவர் கணேஷ் வெங்கட்ராம். என்ன நடந்தாலும், தனக்கான உடற்பயிற்சியையும், உடற்பயிற்சிக்குப் பிறகான முட்டையையும் விட்டுக்கொடுக்காமல் பிக்பாஸ் வீட்டினுள் இருந்தார். சமூக நலன் கருதி இந்த விளம்பரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சமூக இடைவெளி குறித்தும், கோவிட் 19 தொற்றை தடுப்பது குறித்தும் இதில் பேசியுள்ளனர் இந்த தம்பதி.
கொரோனா டாப் 10 : பட்டியலில் இருந்து வெளியேறிய கேரளா; தமிழகத்திற்கு 6-வது இடம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”