Tamil TV News: ஜெயா டிவியில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ‘பென்குயின்’ படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. ‘பென்குயின்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. படம் குறித்தும், டெக்னீஷியன்ஸ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றியும் பல விஷயங்களை ஈஸ்வர் கார்த்திக் பகிர்ந்துக்கொண்டார்.
’தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ டிஜிட்டலில் ரிலீஸாகாது’: கார்த்திக் சுப்பராஜ் உறுதி
அப்போது, கீர்த்தி சுரேஷ் நடிக்க ஆரம்பிக்கும்போது என்ன மைண்டில் ஏத்தி வச்சு இருக்காரோ, அதை முகத்தில் நொடிக்கு நொடி கொண்டு வந்துவிடுவார் என்று கூறினார். பென்குயின் படம் முற்றிலும் கொடைக்கானலில் ஷூட் செய்யப்பட்டது என்றும், மழைக்காலம் தொடங்கியிருந்தது காட்சிக்கு ரொம்ப பிளஸ்ஸாக இருந்தது என்றும் கூறினார். தேனீக்கள்.. மற்றும் சில பூச்சிகள் நிறைய இருந்தது என்று கூறிய ஈஸ்வர் கார்த்திக், அவைகளுக்கு நாங்கள் இடையூறாக இருந்துவிடக் கூடாது என்று தெளிவாக இருந்ததாகவும் கூறினார்.
கீர்த்தி சுரேஷ் ஒருவர் மீதே மொத்த கதையும் டிராவல் செய்து இருப்பதாகவும் கூறினார். இவர் இயக்கிய முதல்படமே ஓடிடி இயங்கு தளத்தில் வெளியாகிறது. என்ன இருந்தாலும் தியேட்டரில் வெளியாவது ஒரு தனி சிறப்புதான் என்றாலும் இப்போது ஓடிடி இயங்குதளம் நல்ல ஆப்ஷன் என்றும் சொல்லி இருக்கார். ஓடிடி இயங்கு தளத்தில் படம் பிடிக்கலேன்னா பாஸ் பண்ணிட்டு போயிருவாங்க. அதனால், இனி கதை பண்ணுபவர்கள் நல்ல தரத்தில் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவாங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு என்றும் கூறினார் கார்த்திக். இப்போதைய கோவிட் 19 தொற்று நிலைமைக்கு ஓடிடி ஒரு நல்ல பிளாட் ஃபார்ம்.
தேர்தல் வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
இசையோடு படம் முழு வடிவம் பெற்ற பின்னர் கீர்த்தி சுரேஷ் கூட படத்தை பார்க்கவில்லை. தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், எடிட்டர், நான் உட்பட மூன்று பேர் தான் படம் பார்த்தோம் என்றும் தெரிவித்தார். ‘பென்குயின்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் தாயாக நடித்து இருக்கார். 19-ம் தேதி வெள்ளி அன்று வெளியாக இருக்கும் இந்த படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”