Sun TV Vanakkam Thamizha: சன் டிவியின் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சந்தியா கலந்துக்கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எனக்கு இப்போது தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும் என்று கூறினார். ஹைதராபாத்தில் பிறந்த சந்தியா தெலுங்கு பெண். இவரது தந்தை ஹைதராபாத்தில் மிகச் சிறந்த ஜர்னலிஸ்ட். கடந்த 15 வருடங்களாக சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் சந்தியா தெலுங்கு சீரியல் படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தவராம். அன்றைய காலக்கட்டங்களில் தெலுங்கு சீரியல் படப்பிடிப்பும் சென்னையில் தான் நடக்கும். அப்போது தமிழ் சீரியலில் நடிக்க அழைத்தார்கள்.
9 மணி ஸ்லாட்: ஜீ தமிழ் ‘செம்பருத்தி’க்கு தான் மீண்டும் வெற்றியா?
மொழி தெரியாது என்று நடிக்க மறுத்தேன் என்று கூறும் சந்தியா, படப்பிடிப்பின் இடைவெளியில் வட்டமாக அனைவரும் அமர்ந்து இருக்கையில், தமிழ் பாடல் ஒன்றை பாடி இருக்கார். அப்போது, இவரின் தமிழ் உச்சரிப்பை பார்த்த இயக்குநர், தமிழ் தெரியாதுன்னு சொல்லிட்டு, நல்ல உச்சரிப்போட தமிழ் பாடல் பாடறீங்க.. நிச்சயம் உங்களால் தமிழ் சீரியலில் நடிக்க முடியும் என்று சொல்லி, சன் டிவியின் ’செல்லமடி நீ எனக்கு’ சீரியலில் நடிக்க வைத்தாராம். இப்போது எனக்கு தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும் என்று சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறார் சந்தியா.
’மாம்பழ கேக்’ ஆண்ட்ரியா, ’ஏலக்காய் டீ’ நித்யா மேனன் – புகைப்படத் தொகுப்பு
’செல்லமடி நீ எனக்கு’ சீரியலுக்குப் பிறகு, சன் டிவியின் ’அத்திப்பூக்கள்’ சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் சன் டிவியின் மதிய நேரத்தில் தொடர்ந்து 5 வருடங்கள் ஒளிபரப்பாகியது. அடுத்து ’வம்சம்’ சீரியல் ஐந்து வருடம் ஒளிபரப்பாகினாலும், இவர் நான்கு வருடங்கள் அந்த சீரியலில் நடித்து இருந்தார். இப்போது சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் 6 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் லாக்டவுனுக்கு முன் ஒளிபரப்பாகி வந்த சில எபிசோடுகளில் இருந்து நடித்திருந்தார் சந்தியா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”