Vijay TV, Neeya Naana: விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் காதலுக்காக சுயமரியாதை, தன்மானத்தை இழக்கலாமா? இல்லை வேண்டுமா என்கிற விவாதம் நடைபெற்றது. விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்தது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் கோபிநாத். காதலிப்பவர்களில் சுயமரியாதை, தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்கள் ஒருபுறம், இதெல்லாம் காதலில் இருக்கவே கூடாது என்று சொல்பவர்கள் ஒருபுறம் என்று அமர்ந்திருந்து பேசினார்.
உடுமலை சங்கர் கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!
காதலரிடம் எது உங்களை வெகுவாக கவர்ந்தது என்று கேட்க, எனக்கு ஒண்ணுன்னா முன்னால வந்து நிற்பார் சார். அவங்களை தட்டி கேட்பார், அந்த கோபம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு பெண் கூறினார். அப்போது உங்களுக்கும் சேர்த்து அடி விழுமே பரவாலயா என்று கோபிநாத் கேட்க, அடி வாங்கி இருக்கேன் சார். இப்போ இந்த இடத்தில் எல்லாரும் பார்க்க அவர் கையால் செருப்பால் அடித்தாலும் நான் வாங்கிப்பேன் சார். எனக்காக அவன் இருக்கிறன் எனும்போது, அவனிடம் நான் அடி வாங்குவதில் என்ன தவறு என்று கேட்டார் அந்த பெண்.
எதிர்தரப்பு பெண் சொல்லும்போது, எல்லாரும் பேசிகிட்டு இருக்கும் போது, உனக்கு என்ன இந்த இடத்தில் வேலை கெளம்பு கெளம்புன்னு சொல்வான் எனக்கு சுர்ருன்னு கோபம் ஏறும் சார். நீ என்ன சொல்றது நான் என்ன போறதுன்னு அந்த இடத்திலேயே நிற்பேன். அவன் கிளம்பி போயிருவான் என்று சொன்னார். காதலி என்னை ஏய்னு கூப்பிட்டாலோ, ச்சீன்னு சொன்னாலோ என் தன்மானத்தை ரொம்ப டச் பண்ணிட்டதா நினைப்பேன் சார். எனக்கு ரொம்ப கோவம் வந்துரும். இந்த காதல் தேவையான்னு நினைப்பு வந்துரும்னு சொன்னார் ஒரு வாலிபர். காதலி சொன்னதால் நான் சமைக்க கத்துக்கிட்டேன் சார் என்று ஒருவரும், ரேஷன் கடைக்கு அம்மா போகச் சொன்னால் கோவம். கூட காதலி வர்றேன்னு சொன்னால் பேசாம கிளம்பிருவேன் சார் என்று ஒரு வாலிபரும் சொன்னார்கள்.
செல்ஃப் ரெஸ்பெக்ட் என்பது என்னோட அடையாளம். லவ்வுன்னு ஒரு டூலை வச்சு இதை அழிச்சுகிட்டே இருக்கீங்களே இது நியாயமா என்று ஒரு பெண் கேட்டார். இதற்கு சடாரென்று பதில் அளித்த ஒரு பெண், கிளியராயிருச்சு, அப்போ நீங்க உங்களை சுத்தி இருக்கும் கார்ப்பரேட் காரர்களுக்காக வாழறீங்க. அவர் என்னை ரெண்டு வருஷமா எதாவது சொல்லிகிட்டே இருந்தாலும் நான் கேட்டுகிட்டு இருக்கேன். இருபது வருஷம் சொன்னாலும் நான் கேட்டுக்குவேன். அவர் எனக்கான சோல்.. இங்கே சுயமரியாதை, தன்மானம் கிடையாது. கடைசி வரைக்கும் நாங்க ஒண்ணா இருப்போம்.. ஆனா, உங்க சுயமரியாதையை அவங்க டச் பண்ணிட்டாங்கன்னா நீங்க தூக்கிப் போட்டுட்டு போயிருவீங்க. இதனால் தான் பல காதல் பிரேக் அப் ஆகுதுன்னு சொல்லி கைத்தட்டல் வாங்கினார்.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் சில்லறை கடன்… எல்லோருக்கும் கிடைக்கும்
சின்னத்திரை சீரியல் நடிகை ரம்யா இதில் கலந்துக்கொண்டு, ஒரு பெண் காதலனிடம் அடி வாங்கி இருக்கேன்னு சொல்றாங்க. இது வன்முறை இல்லையா? இது எப்படி சார் லவ் ஆகும் என்று கேட்டார். அந்த பெண், இது என் லவ், என் வாழ்க்கை இவர் தான்னு ஆகிப்போச்சு. அதுக்குப்பிறகு இது எப்படி சார் குற்றமாகும் என்று திருப்பி கேட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”