Vijay TV, Super Singer: விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் கலந்துக்கொண்ட ஷிவாங்கி அந்த நிகழ்ச்சியின் போது கூட அவ்வளவு பாப்புலராகவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது தான் அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட கோமாளியாக இருந்தார். குழந்தை உள்ளம், மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடுவது என்று கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் ஷிவாங்கிக்கு. சுத்தமாக சமையல் அறை பக்கமே போகாமல் இருந்ததன் பலனை, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக கலந்துக் கொண்டதன் மூலம் அனுபவித்தார். குக்கு ரேகாவிடம் தோசை சுட முயன்று, தோசை வராமல் ரேகாவிடம் அடி வாங்கினார். மேலும் ரேகா அடிக்க வர தப்பித்து ஓடுவது இதெல்லாம் என்னதான் சிரிப்பாக இருந்தாலும் ஒரு ரியாலிட்டி ஷோவில் இது நடப்பது என்பது கஷ்டமாகத்தான் இருந்தது.
Ponmagal Vandhal In TamilRockers: அதே ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ், இந்த அடியைத் தாங்குமா ஓ.டி.டி.?
என்ன தப்பு பண்றேன். இந்த தோசை ஏன் நல்லா வர மாட்டேங்குது... மாவு அப்படியே கரண்டியோட ஒட்டிக்குதே என்று குழந்தை பாவம் மண்டையை போட்டு ரொம்பதான் குழப்பிக்கொண்டு, தனக்குத்தானே புலம்பிக்கொண்டு இருந்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்துக்கொண்டு பாடிய 'பூமாலை ஒரு பாவையானது’ என்கிற பாடலை இன்று இரவு ஒளிபரப்பு செய்ய இருக்கிறது விஜய் டிவி. ஷிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணன் பாட்டு சொல்லிக்கொடுக்கும் சங்கீத குரு, என்றாலும் பொறுமையுடன் உட்கார்ந்து அம்மாவிடம் சங்கீதம் கற்றுக்கொண்டது இல்லையாம் ஷிவாங்கி. கேட்டால், அந்த அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது.. ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் முழுமையா உட்கார மாட்டேன் என்று சொல்கிறார்.
கெத்து ராய் லக்ஷ்மி, ஆஸம் மேகா ஆகாஷ் – புகைப்படத் தொகுப்பு
ஷிவாங்கியின் அம்மா, சந்திரமுகி படத்தில் "ராரா... சரசுக்கு ராரா" பாடலை பாடியவர். அப்பா கிருஷ்ணனும் சங்கீத வித்வான். இப்படி சங்கீத குடும்பத்தில் பிறந்து, நல்ல குரல் வளத்துடன் ஷிவாங்கியும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிக அருமையாக பாடி அசத்தி இருக்கார். இயற்கையாகவே ஷிவாங்கிக்கு காமெடியும் நன்றாக வருகிறது. அறியாமல் இவர் பேசுபவை அத்தனையும் காமெடிகளாக சிரிக்க வைக்கின்றன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”