Tamil TV News: ஜீ தமிழ் டிவியின் 2019 குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை, அந்த தொலைக்காட்சி மறு ஒளிபரப்பு செய்தது. மக்கள் விரும்பும் ஹீரோயின் விருதை 'செம்பருத்தி' சீரியல் நாயகி ஷபானா இரண்டாவது முறை பெற்றார். இவருக்கு விருது வழங்க மேடை ஏறியவர்கள் தளபதி விஜயின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். ஷபானா, நடிகர் விஜய்யின் ரசிகை. வாய்ப்பு கிடைக்கும்போது இதை பதிவு செய்ய அவர் தவறுவதில்லை. விருதை இருவர் கையால் வாங்கி நெகிழ்ந்த ஷபானா, ஐயோ... தளபதி அம்மா, அப்பா என்று தனக்குள் கூறி, இது கனவா நிஜமா என உறுதிப்படுத்திக் கொண்டார்.
சினிமான்னா விஜய், கிரிக்கெட்ன்னா தோனி: ஜெ.அன்பழகன் ஃபேன் பாய் மொமெண்ட்ஸ்!
தளபதி Dialogue எல்லாம் பேசி மாஸ் காட்டுறீங்களே ஷபானா!????
Zee Tamil Kudumba Viruthugal#ZTKV #Throwback #ZeeTamil pic.twitter.com/yzPnQulvCH
— Zee Tamil (@ZeeTamil) June 7, 2020
அண்ணாவை கேட்டதா சொல்லுங்க என்று சொல்லி கூட்டத்தினரிடம் மேலும் அதிர்வலையை உண்டாக்கினார் ஷபானா. ரொம்ப நெகிழ்ச்சியில் இருக்கீங்க.. ஒரு முறை பெரிய ஐயான்னு கூப்பிடுங்க என்று கேட்டார் திருமதி ஷோபா சந்திரசேகர். செம்பருத்தி சீரியலில் நாயகன் ஆதியை நாயகி பார்வதி பெரிய ஐயா என்று அழைத்துக் கொண்டே இருப்பார். அப்படி இருவருக்குள்ளும் மலரும் காதல் தான் செம்பருத்தி சீரியலின் ஹைலைட். இதனால் தான் அப்படி ஒருமுறை அழைக்க சொல்லி ரசித்தார் ஷோபா சந்திரசேகர்.
கார்கில் போரின் முதல் பெண் விமானி கதை; அதிரடி காட்ட தயாராகும் ஜான்வி கபூர்
அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் அர்ச்சனா, தளபதி டயலாக் ஒன்றை பேசுங்கள் என்ற போது, கொஞ்சமும் தாமதிக்காமல் ’என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். யார் சொன்ன லைன்சுன்னு தெரியலை.. ஆனா, நான் என் லைஃப்ல ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்.. உசுப்பேத்தறவங்க கிட்டே உம்முன்னும் கடுப்பேத்தறவங்ககிட்டே கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என்று தளபதி ஸ்டைலில் பேசி அசத்தினார் ஷபானா. விழாவுக்கு வந்திருந்த நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் கூட இதை ரசித்து சிரித்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.