/indian-express-tamil/media/media_files/2025/09/17/chandhr-2025-09-17-11-11-00.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள நடிகை சாந்தினி பிரகாஷ், சீரியலில், நடிகை நிரோஷாவிடம் உண்மையாகவே அடி வாங்கியதாகவும், அதை தானே கேட்டு வாங்கிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் பூவே பூச்சூடவா சீரியல் மூலம், பிரபலமான நடிகை சாந்தினி பிரகாஷ் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுகன்யா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார், விஜய் டிவி சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனம் ஈர்த்து வருகிறது, அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியலாக பலரின் மனதை வென்றது.
இந்த சீரியல் முடிந்த உடனே அடுத்த வாரமே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பானது. இதில், நடிகை நிரோஷா பாண்டியன் கேரக்டரின் மனைவி கோமதி கேரக்டரில் நடித்து வரும் நிலையில், முதல் சீசனில் நடித்த வெங்கட், ஹேமா ராஜ்குமார், ஸ்டாலின் முத்து ஆகியோர் மட்டும் 2-வது சீசனில் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்த சீரியலில் சுகன்யா என்ற முக்கிய கேரக்டரில் வில்லியா? நல்லவரா என்ற குழப்பத்தை ஏற்படும் கேரக்டராக வருபவர் தான் சாந்தினி பிரகாஷ்.
சமீபத்தி .ஐ.பி.சி தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வரும் கேரக்டர்கள் குறித்து பேசியிருந்தார். இதில் அரசியின் காதல் விவகாரம் குறித்து பேசியபோது, சீரியலில் வரும் குழலி கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல் கோமதி (நிரோஷா) கேரக்டர் ரொம்ப பாவமான கேரக்டர். செட்டில் அவரை பார்க்கும்போதே பாவமாக இருக்கும். கிராமத்து பெண்கள், கணவர் பேச்சை மீறமாட்டார்கள். அதேதான் அந்த கோமதி கேக்டர். அதை ரொம்ப அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.
என்னை போட்டு ஒருமுறை வெளுத்து கட்டினார். அந்த காட்சியில் ரியாலிட்டியாக என்னை அடித்தார். அடிப்பேன் அட்ஜெட்ஸ்ட் பண்ணிக்கோ என்று சொன்னார். நீங்க அடிங்க மேம் பாத்துக்காலாம் என்று நான் சொன்னேன். அதன்பிறகு தான் அவர் என்னை அடித்தார் என்று கூறியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசிய சாந்தினி, எனக்கு பாய் பிரண்ட் கிடையாது. நீ இருக்கிறா? செத்தியா? உயிரோடு இருக்கிறா என்று யாரும் கேட்கமாட்டார்கள் எனக்கு எந்த போன்காலும் வராது. இருக்கியா? இல்லையானு கேட்க கூட எனக்கு யாரும் இல்லை.
இந்த நிலை எனக்கே பழகிவிட்டது. மன உளைச்சல் இருக்கிறது வேலை செய்ய முடியவில்லை என்றால் ஏன் அதில் இருக்க வேண்டும்? அதில் இருந்து வெளியில் வர வேண்டும். நமக்குனு யார் இருக்கிறார் என்று யோசித்தால் அது டைம் வேஸ்ட். நான் உனக்கு ஒன்று செய்கிறேன். நீ இதை எனக்காக செய்ய வேண்டும் என்று நான் யாரிடமும் கேட்கமாட்டேன். இந்த நிலைமையில் நமக்கு யாருமே இல்லை என்று பல பெண்கள் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது தவறு. முடியாது என்று நினைக்காமல் அதில் இருந்து வெளியில் வர வேண்டும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.