ரீல் ஜோடிக்கு இடையே புகுந்த ரியல் ஜோடி: ராஜா ராணி 2 சுவாரசிய வீடியோ

Raja Rani 2 Serial : இந்த சீரியலில், மாமியார் வீட்டில் மருமகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து கதை எழுதப்பட்டுள்ளது.

Raja Rani 2 Serial : இந்த சீரியலில், மாமியார் வீட்டில் மருமகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து கதை எழுதப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ரீல் ஜோடிக்கு இடையே புகுந்த ரியல் ஜோடி: ராஜா ராணி 2 சுவாரசிய வீடியோ

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரபாகி வரும் ராஜா ராணிக்கு தமிழகத்தில் பலமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த  சீரியலில் நாயகன் நாயகியாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட ஆல்யா மானசா சஞ்சீவ் இருவரும், காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு,  ஐலா சையத் என்கிற மகள் உள்ளார்.

Advertisment

இந்நிலையில், பிரசவம் காரணமாக கடந்த ஆண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஆல்யா தற்போது, ராஜா ராணி 2ம் சீசனில் நாயகியாக நடித்து வருகிறார்.  சமீபத்தில் இந்த சீரியலின் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு திடீர் விசிட் கொடுத்த, ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் படப்பிடிப்பின் இடையில் ஆல்யாவுடன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி.வருகிறது

தற்போது இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருமணம் சீரியலில் நடித்த நடிகர் சித்து நாயகனாக நடித்து வரும் இந்த சீரியலில், மாமியார் வீட்டில் மருமகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து கதை எழுதப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: