/tamil-ie/media/media_files/uploads/2019/11/Iraa-Agarwal-1.jpg)
Iraa Agarwal tamil serial actress, zee tamil nadagam, zee tamil roja, ஜீ தமிழ் டிவி, ஜீ தமிழ் சீரியல், ராஜா மகள், ஐரா அகர்வால்
Tamil TV Serial News: கொடுக்கிற கடவுள் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க. அது ஐரா அகர்வாலுக்கு அட்சர சுத்தமாக பொருந்தும் போல!
கண்மணி சீரியலில் வானதியாக அசத்திய ஐரா-வுக்கு, விஜய் டிவி-யின் கடைக்குட்டி சிங்கத்தில் வாய்ப்பு தேடி வந்தது. அதில் ஒப்பந்தமாகியிருந்த ஷிவானி நாராயணன் சொந்தக் காரணங்களுக்காக விலகிக் கொள்ள, கடைசி நிமிடத்தில் ஜாக்பாட் அடித்து இணைந்தார் ஐரா அகர்வால்.
இப்போது ஸீ தமிழ் சேனல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் ‘ராஜா மகள்’ சீரியலில் நாயகி ஆகியிருக்கிறார் ஐரா. கடந்த 28-ம் தேதி முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் தினமும் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. சிவகாமிக்கும் அவரது மூத்த சகோதரர் ராஜராஜனுக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பதில் ஏற்படும் முரண் காரணமாக உருவாகும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தத் தொடர் நகர்கிறது. காதல், பொறாமை, தியாகம் என குடும்ப, ஜனரஞ்சக விஷயங்களுக்கு இதில் பஞ்சம் இருக்காது.
ராஜா மகள் படத்தில் துளசியாக ரசிகர்களை கொள்ளை கொள்ள வருகிறார், ஐரா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரியாஸ் நடிக்கிறார். வனஜா, பரத் கல்யாண், காயத்ரி பிரியா, பரதன் ஆகியோரும் இந்த சீரியலில் நடிக்கிறார்கள்.
கண்மணி, கடைக்குட்டி சிங்கம், ராஜா மகள் தவிர, பெரிய திரையிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் ஐரா. 2014-ம் ஆண்டு, ‘மிஸ் தென் இந்தியா’வாக தேர்வு பெற்றவர் இவர். ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தையும் வென்றிருக்கிறார்.
ராஜா மகள் சீரியல் வாய்ப்பைத் தொடர்ந்து, மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார் ஐரா. ‘ஹாய், மை லவ்லி ஃபேன்ஸ், உங்களின் அன்பும், ஊக்கமும் எனக்குத் தேவை’ என ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார், இந்த தென் இந்திய அழகி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.