Advertisment

பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ன ஆச்சு? டி.ஆர்.பி டாப் 5-ல் முழுக்க சன் டி.வி சீரியல்கள் ஆதிக்கம்

முதல் 5 இடங்களையும் சன்டிவி சீரியல்களே ஆக்கிரமித்துள்ளன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல சீரியல்கள் அதிரடி மாற்றம் அடைந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
TV Serials

TV Seirals

சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தாலும் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெறுகிறது என்பதை அடிப்படையாக வைத்துதான் சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் 27-வது வாரத்திற்கான சின்னத்திரை சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த ரேட்டிங்கில் கடந்த வாரம் இதுவரை எந்த சீரியலும் பெறாத டிஆர்பி புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்திருந்த எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் புள்ளிகள் சரிந்து 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் முதல் 5 இடங்களையும் சன்டிவி சீரியல்களே ஆக்கிரமித்துள்ளன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல சீரியல்கள் அதிரடி மாற்றம் அடைந்திருக்கிறது.

கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நிலையில், கடந்த வாரம் சற்று சரிவை சந்தித்து 2-வது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் இந்த வாரம் 11.14 புள்ளிகளை பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த வாரம் ஆதிரையின் திருமணம் காரணமாக டிஆர்பியில் ஏற்றம் கண்டது ஆனால் இந்தவாரம் சற்று சரிவை சந்தித்து 10. 88 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றுள்ளது.

வானத்தைப்போல

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியல் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் 9.87 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

மிஸ்டர் மனைவி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.73 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இனியா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் சற்று சரிவை சந்தித்து 9.58 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரமும் 9.35 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தை போலவே 6-வது இடத்தை பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 8.75 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தை தக்க வைத்திருக்கிறது.



பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வரமும் 7.24 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்துள்ளது

ஆனந்த ராகம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரம் பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.62 பெற்று 9-வது இடத்தை பெற்றுள்ளது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் ஒன்பதாவது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 6.61 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment