Advertisment

சறுக்கிய எதிர்நீச்சில்... முதலிடத்தில் புதிய சீரியல் : இந்த வார டி.ஆர்.பி நிலை என்ன?

இந்த ஆண்டின் 45-வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
Nov 17, 2023 20:40 IST
New Update
Serial TRP

தமிழ் சீரியல்

இல்லத்தரசிகள் மட்டும்லலாமல் இளைஞர்கள் பெண்கள் என பலரும் தற்போது தங்கள் கவனத்தை சின்னத்திரை பக்கம் திருப்பியுள்ளனர். இதற்கு ஏற்ற வகையில் சின்னத்திரையில் அவ்வப்போது புதிய கதைகளத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் திரைக்கதைகளையும் சுவாரஸ்யமாக மாற்றி வருகின்றனர்.

Advertisment

அதே சமயம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எந்த சீரியல் முதலிடம் பிடிக்கிறது என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் 45-வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சன்டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல், கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 10.28 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த கயல் சீரியல் இந்த வாரம், 10.23 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக சன்டிவியின் எதிர்நீச்சல் மற்றும் வானத்தைப்போல ஆகிய 2 சீரியல்கள் 9.76 புள்ளிகளுடன் 3-வர் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த சுந்தரி சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி, 9.39 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த இனியா, இந்த வாரம் 7.46 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், ஆனந்தராகம் சீரியல் 7.32 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 6.97 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது.

அதேபோல் விஜய் டிவி சீரியலான பாக்கியலட்சுமி 8-வது இடத்திலும், ஆஹா கல்யாணம் 9-வது இடத்திலும் உள்ள நிலையில், ஜீ தமிழின் கார்த்திகை தீபம் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment