தமிழில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், இந்த வாரம் சீரியல்களின் வரிசையில் பெரும் மாற்றம் கண்டிருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக பார்க்கப்பட்ட சீரியல்களின் டி.ஆர்.பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களைப் பார்ப்போம்.
1.சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 10.3 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.
2. மூன்று முடிச்சு: சமீபத்தில் சன் டிவியில் தொடங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியல், 9.92 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
3. கயல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 9.80புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.
4. மருமகள்: சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் மருமகள் சீரியல் 9.13 புள்ளிகளை பெற்று 4வது இடத்தினை பிடித்துள்ளது.
5. ராமாயணம்: சன் டிவியின் ராமாயணம் சீரியல் 8.78 புள்ளிகளுடன் 5-வது இடம்பெற்றுள்ளது.
6. அன்னம்: சமீபத்தில் சன்டிவியில் தொடங்கப்பட்ட அன்னம் சீரியல், 8.60 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
7. சிறகடிக்க ஆசை: முதல் 6 இடங்களை சன் டிவி சீரியல் ஆக்கிரமித்துள்ள நிலையில், 7-வது இடத்தை விஜய் டிவி சீரியல் பிடித்துள்ளது. விஜய் டிவியில் பிரபலமான சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை 8.25 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தை பிடித்துள்ளது.
8. பாக்கியலட்சுமி: விஜய் டிவியின் மற்றொரு முக்கிய சீரியலான பாக்கியலட்சுமி 6.69 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்6.52 புள்ளிகளை பெற்று 9 வது இடத் தை பிடித்துள்ளது.
10. ரஞ்சனி: சன்டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ரஞ்சனி சீரியல், 6.05 புள்ளிகளை பெற்று இந்த பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளது,
ஜீ தமிழ் சீரியல் நிலவரங்கள்: ஜீ தமிழின் அண்ணா சீரியல், 5.49 புள்ளிகள், சந்தியாராகம் 5.39 புள்ளிகள் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் 5.36 புள்ளிகளை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“