டி.ஆர்.பி ரேட்டிங்கில் கடுமையான மோதலை சந்தித்தாலும் முன்னணியில் இருந்த சன்டிவி சீரியல்களை விஜய் டிவி பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியல்கள் பெறும் டி.ஆர்.பி ரேட்டிங்கை வைத்தே எந்த சீரியல் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது என்பது தெரியவரும். குறிப்பாக தமிழில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கே அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதை தொடர்வதற்காக இரு சேனல்களும், அவ்வப்போது புதிய சீரியலை களமிறக்குவதும், பழைய சீரியல்களில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் முயற்சித்து வருகின்றனர்.
குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் வகையில், அவ்வப்போர் இரு சீரியல்களை ஒன்றிணைத்து மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் காதலை 10மணிக்கு தொடங்கி நள்ளிரவு 11.30 வரை சன்டிவியில் வெறும் சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் ஒரு படம் ஒளிபரப்பானாலும் படம் முடிந்தவுடன் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் உடனடியாக சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கிவிடும்.
இதன் காரணமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன்டிவி சீரியல்களுக்கு அதிக ரேட்டிங் கிடைத்து வருகிறது. சீரியல்களை போல் ரியாலிட்டி ஷோக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் டிவியில், வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் வாரம் முழுவதும் சீரியல்கள் என்று ஒளிபரப்பி வருகிறது. இதில் நகரத்து மக்களிடம் விஜய் டிவி சீரியல்களும், கிராமத்து ரசிகர்களிடம் சன்டிவி சீரியல்களும் கவனம் ஈர்த்து வருவதாக ஒரு தகவல் உள்ளது.
டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், தற்போது கிராமபுறங்களிலும் விஜய் டிவி சீரியல்கள் தான் முன்னணியில் உள்ளன என்று விஜய் டிவி தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராமபுறங்களில் 11-50 வயது வரை உள்ளவர்கள் விஜய் டிவி சீரியலுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, விஜய் டிவியின் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.