Tamil Serial Rating : வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த சௌந்தர்யா : இந்த வார டாப் பாரதி கண்ணம்மா?

Tamil Serial news : தமிழ் சீரியலில் இன்று எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

Tamil Serial news : தமிழ் சீரியலில் இன்று எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : வெண்பாவுக்கு ஷாக் கொடுத்த சௌந்தர்யா : இந்த வார டாப் பாரதி கண்ணம்மா?

Tamil Serial Rating Update : தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். அந்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல. சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம்.

Advertisment

இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இன்றைய ப்ரமோவில் கண்ணனை ஐஸ்வர்யாவிடம் பேசக்கடாது என்று மூர்த்தி எச்சரிக்கை.

Advertisment
Advertisements

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள பலரும், பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் சீரியல் ரொம்ப மொக்கையாக இருப்பதாக கமெண்ட் கொடுத்துள்ளார். மேலும் ஒருவர் கண்ணனா என்றும், மற்றொருவர் அர பேவரெட் சீரியல் என்றும் பதிவிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கதிர் பாஸ் செய்தது அதன்பிறகு வந்த காட்சிகள் அனைத்து ரசிகர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் ஒரு சில ரசிகர்கள் ரொம்ப ஓவர் என்று கருத:துக்களை கூறினாலும்? பலரும் இந்த காட்சிகளை விரும்பி பார்த்துள்னர். ஆனால் தற்போது கண்ணன் தொடர்பாக காட்சிகள் ரசிகர்களை சலிப்படைய வைத்துள்ளது என்றே கூறலாம்.

பாரதி கண்ணம்மா

ஹேமா மருத்துவனையில் இருப்பதால் இந்த சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பாட்டுள்ளது.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வெண்பாவை கலாய்த்தும், சௌந்தர்யாவுக்கு பாராட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் குடும்பத்தை கெடுக்குறதுக்குன்னு ஒரு கூட்டம் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் அப்படி போடுங்க சௌந்தர்யா மேடம் இந்த மாதிரி ஜென்மத்தை எல்லாம் இப்படித்தான் அடிக்கனும் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் சூப்பர் அப்படியே செவுள்ள போட்டு ஓரமா உட்கார வைங்க எள பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஒரே அர சும்மா நச்சுணு கண்ணத்துல கொடுக்கணும் என் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எவ்ளோ அசிங்கப்படுத்தினாலும் இந்த வெண்பாக்கு அறிவே கிடையாது திரும்ப திரும்ப போய் நிக்கரா பாரு என்று கூறியுள்ளார். மேலும் பலர் சௌந்தர்யாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி :

இந்த சீரியல் எபிசோடு இந்த வாரம் பாக்யலட்சுமி பைக் ஓட்டும் காமெடி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த பரமோவை பார்த்த ரசிகர்கள் எழிலுக்கு ஆதரவுகாகவும், அவரை கலாய்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிள்றனர். இதில் ஒரு ரசிகர் தினமும் இந்த வீட்டுக்கு வராரே எழில் தப்பாச்சே என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் பைத்தியம் என்றும், பதிவிட்டுள்ளனர். பாக்யாவின் காமெடிக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் அதே நேரத்தில் எழில் அங்கு சென்று பேசும் விதம் ரசிகர்களை சலிப்படைய வைக்கிறது.

ராஜா ராணி

கணவன் மனைவிக்குள் இருக்கு உரசல் வெளியாக தொடங்கியுள்ளது.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சிவகாமி மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் சிவகாமியை பார்த்தாலே கோபம் வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

ரோஜா

குடும்ப மோதல் கோர்ட் வரை

,இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் டைகர் மாணக்கத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் எந்த ஆதாரம் இருக்கு டைகர் மாணிக்கம் இன்னொரு ஆதாரம் இருக்கு அந்த ஆதாரம் மண்டபம் மேனேஜர் உண்மை சொன்னால் மட்டுமே என பதிவிட்டுள்ளார்.  மற்றொரு ரசிகர் ஜெயில்ல இருந்து ரோஜா வெளியே வந்ததும் அர்ஜுன் ரோஜா இருவரும் புலிமாணிக்கம் கிட்டயும் அண்ணபூரணி அம்மா கிட்டயும் பேசவேக்கூடாது என கூறியுள்ளார்.

இதில் மற்றொரு ரசிகர் மக்கு மாணிக்கமே அர்ஜுனிடம் மூக்கு உடை வாங்க தயாராக இரும் ஐயா என கூறியுள்ளார். டைரக்டர் க்கு மூளை இருப்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லையே...என மற்றொரு ரசிகரும், இப்படி ஒரு அப்பா எனக்கு தேவயில்ல எனக்கு அப்பா அம்மா எல்லா உரவும் அர்ஜுன் தான் சொல்லு ரோஜாஎனவும் பதிவிட்டுள்ளனர். இதில் மற்றொரு ரசிகர் இது என்ன டா புது புரளியாரு இருக்கு... ஆதாரம் இல்ல எனும் காரணத்தினால் யார வேண்டுமானாலும் கொலைகாரன் என்று சொல்லலாமா??? என கூறியுள்ளார்.

இதில் ரசிகர்களின் கருத்துப்படி பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரிந்து இருந்த பாரதி கண்ணம்மா தம்பதி கடந்த சில நாட்களாக சந்திக்கும் கட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே பரபரப்போடு ஹேமா உடல்நிலை சரியில்லாத்தால் பாரதி கண்ணம்மாவை தேடி போவது ரசிகர்களுக்கும் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: