Radhika Sarathkumar In Jaya TV:: ஜெயா டிவியின் ஆட்டோகிராப் நிகழ்ச்சியை நடிகை சுகாசினி தொகுத்து வழங்கி வந்தார்.. இப்போது கோவிட் தொற்று லாக்டவுன் அமலில் உள்ளதால், இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி இப்போது மறு ஒளிபரப்பு செய்து வருகிறது.
இதன் ஒரு ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். அப்போது, சரத்குமாரின் பள்ளி காலத்து நண்பர்கள் நிகழ்ச்சியின் நடுவில் வந்து சரத் பற்றி சொல்லிவிட்டுப் போனார்கள்.
அடுத்து உடன் நடித்த ஹீரோயின் என்று நடிகை மீனா நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது சரத்துடன் நிறைய படங்கள் நடித்து இருக்கிறீர்கள்.. சரத்குமார் குறித்து சொல்லுங்கள் என்றபோது, முதல் படம் நடித்தபோது, சரத்குமார் சார் அதில் ஹீரோவாக இல்லை. நான் ஹீரோயினாக நடித்தேன். அடுத்து, நாட்டாமை படம் கேட்டபோது எனக்கு நடிக்க விருப்பமே வரலை. அப்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து பிசியாக இருந்தேன்.
அதோடு, ஹீரோ ஒரு ரோல் என்றாலே ஹீரோயினுக்கு நடிக்க அவ்வளவாக வாய்ப்பு இருக்காது. அதுவும் சரத் சார் டூயல் ரோல் நடிக்கிறார் என்றால் எங்கே நமக்கு நடிக்க வாய்ப்பு இருக்கப் போகிறது. அதுவும் குஷ்பூ வேற நடிக்கறாங்க…இதில் நமக்கு என்ன பெரிசா நடிக்க வாய்ப்பு இருந்துவிடப் போகிறதுன்னு நினைச்சு தயங்கினேன்.
அப்புறம் நடிச்சதுக்கு பிறகுதான் தெரிஞ்சுது எவ்ளோ நல்ல ரோல்னு…அதேமாதிரி மாயி படத்தில் சரத் சார் கூட நடிச்சப்போ டயட் இருக்கணும்னு சொல்லிட்டாங்க என்று கூறினார். முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன் என்று சொன்னார்.
இவங்க கேரவன்ல உட்கார்ந்து இருக்கும்போது நான் சமைச்சு கொண்டு போயி குடுத்து இருக்கேன்னு சரத் நடுவில் குறுக்கிட்டு சொன்னார். சரத் உதவி கேட்டு வந்தா அவங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார்.. டவுன் டு எர்த் பர்சன்.. அதனாலதான் அவரால் ஒரு லீடராகவும் இருக்க முடிகிறது என்று சொன்னார்.
சரத்குமாரின் மனைவி ராதிகா நிகழ்ச்சிக்கு வந்தார். முதலில் இவரை பார்த்ததும் என்ன இவ்ளோ ஹார்டா இருக்காரேன்னு நினைச்சேன்..அண்ணாத்தே படத்தில் சேர்ந்து நடிக்கும்போது, ரசிகர்களுடன் சேர்ந்து நின்று சலிக்காம போட்டோ எடுத்துக்கொண்டு இருப்பார். ராத்திரி எத்தனை மணி ஆனாலும் சிரித்த முகத்துடன் செட்டில் இருப்பார் என்று சொன்னார் ராதிகா.
ராதிகா குறித்து சரத் கூறுகையில், ஒரு பெண்ணை சைட் அடிக்கணும்னு நினைச்சாலே கண்டு பிடிச்சுடுவாங்க என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட ராதிகா, லண்டன்ல காரில் போய்கிட்டு இருக்கும்போது நான் தூங்கிட்டு இருந்தேன். கார் நடுவுல ஜெர்க் ஆச்சு.. என்ன பொண்ணை பார்க்கறீங்களான்னு கேட்டேன்.. உனக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு ஆச்சரியப்பட்டார். அதான் வண்டி ஜெர்க் ஆகுதேன்னு சொன்னேன்… அந்த பெண்ணும் இவரும் காரை ஒரே லெவலில் ஓட்டிக்கொண்டே வந்தார்கள் என்று கூறினார்.