shivangi krishna kumar Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பாப்புலரான சிவாங்கி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தவராக வலம் வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பாடகியாக தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில், சிவாங்கியும் தமிழில் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சிவாங்கி விஜய் டிவியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வரும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கான இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் ஆண்கள் பெண்கள் போலவும், பெண்கள் ஆண்கள் போலவும் வேடமிட்டுள்ளனர். சிவாங்கி வைகைப்புயல் வடிவேலு கெட்டப்பில் களமிறங்கியுள்ளார்.

தற்போது யூடூப் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“