Tamil TV News: சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது கண்மணி சீரியல். இப்போது கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் உள்ளதால், சின்னத்திரை பெரியத்திரை படப்பிடிப்புகள் இல்லை. இந்த சமயத்தில் சன் டிவி எப்போதும் போல அதே நேரத்துக்கு கண்மணி சீரியலை ஆரம்பத்தில் இருந்து மறு ஒளிபரப்பு செய்து வருகிறது.
அக்காவுக்கு திருமணம் ஆன உடன், சின்ன பையனாக இருக்கும் கண்ணன் அக்காவுடனே மாமா வீட்டுக்கு வந்துவிடுகிறான். மாமா தர்மதுரைக்கு கண்ணன்தான் மூத்த பிள்ளை மாதிரி. காரைக்குடி ஷூட்டிங் வீடு, வயல் வரப்பு காட்சிகள் என்று பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. கண்ணனாக நடிப்பவர் நம்ம சின்னத்திரை சூப்பர் ஸ்டார் சஞ்சீவ். இவருக்கு அக்காவாக முதன்முதலாக சின்னத்திரை சீரியலில் நடிப்பவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.
Sun TV Kanmani Serial: கண்ணன் எங்கே, கண்ணன் எங்கே?
அக்கா விஜயலட்சுமிக்கும், மாமா தர்மதுரைக்கும் திருமணமான நாள் இன்று. இந்த கொண்டாட்டத்தை பெரிய அளவில் கொண்டாட பிளான் செய்து இருக்கிறான் கண்ணன். கேரள மேளம் என்ன.. வாத்தியம் என்ன.. அதோடு தமிழ்நாட்டு மேளம் என்னன்னு ஒரே மங்கள வாத்தியங்கள் சத்தம். கண்ணன் எங்கே கண்ணன் எங்கே என்று தேடினால் ஆளையே காணோம்.
கண்ணன் வந்துதான் அடுப்பில் இருக்கும் பாலை காய்ச்ச, அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். மற்றவர்கள் அடுப்பைப் பற்ற வைத்தால் பற்றாதாம். நிஜமாகவே இதை ட்ரையல் பார்த்த தர்மதுரையின் தங்கை கணவர்கள் அடுப்பு பற்ற வைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள்.
அதோ... கண்ணன் மாமா வரார்னு ராஜதுரையின் கடைக்குட்டி மகள் சொல்ல, எங்கே எங்கே என்று எல்லாரும் அந்த பெண் காட்டிய திசையில் பார்க்கிறார்கள். கையில் எரியும் கற்பூரத்துடன் வந்த கண்ணன், அதை அடுப்பில் போட அடுப்பு திகுதிகுவென எரிகிறது. அய்யனார் கோயிலில் நேந்துகிட்டு அங்கு கற்பூரத்தை ஏத்தி எடுத்துக்கிட்டு வந்து, அங்கிருந்து ஓடிவந்து அந்த எரியும் கற்பூரத்தில் இங்கே அடுப்பைப் பற்ற வைக்கிறான் கண்ணன்... அருணாச்சலம் படத்தோட காட்சி இது இல்லை.
picture courtesy: sun tv
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"