விஜய் டிவி நிகழ்ச்சியில் டி.ஜே.பிளாக்கை மேடையில் வைத்து பூஜாவின் அம்மா திட்டிய நிகழ்வு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உண்மையா அல்லது ப்ராங்கா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய் டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் காமெடி நிகழ்ச்சிகளில் இடையில் வரும் பாடல்கள், மற்றும் காமெடி டைலாக்கள் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த வேலையை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டி.ஜே.பிளாக்.
தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியளராக பங்கேற்றுள்ள பூஜாவுக்கு பல சுவாரஸ்யமாக பாடல்களை கொடுத்து டி.ஜே.பிளாக் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனிடையே தற்போது பூஜாவின் அம்மா டி.ஜே.பிளாக்கை மேடையில் வைத்து கண்டபடி பேசியுள்ளார்.
பூஜாவின் அம்மா மற்றும் அவரது உறவினர்கள் இன்று சூப்பர் சிங்கர் மேடை ஏறிய நிலையில், பூஜாவுக்கு ஏற்ற ஒரு பாடலை டி.ஜே.பிளாக் ப்ளே செய்கிறார். அப்போது பூஜாவின் அம்மா டி.ஜே.மீது எனக்கு கொஞ்சம் மன வருத்தம்.எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. அவர் ஒரு பெண் பிள்ளை எல்லாத்தையும் மனதில் வைத்துக்கொண்டு பாடல் போட வேண்டும் என்று கோபமாக பேசியுள்ளார்.
எனக்கென்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு.. 😆
— Vijay Television (@vijaytelevision) March 4, 2023
சூப்பர் சிங்கர் Season 9 – இன்று மற்றும் நாளை மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #VijayTV pic.twitter.com/mdXc2ONH8w
எல்லாருக்கும் போடுற மாதிரிதான் போடுறேன் என்று டி.ஜே.பிளாக் சொலல் இது கொஞ்சம் ஓவரா இருக்க மாதிரி இருக்கு என்று பூஜாவின் அம்மா சொல்கிறார். இதை பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் ஷாக்காகின்றனர். இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது உண்மையா ப்ராங்கா என்று கேட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil