கண்ணம்மா, பாக்யாவுக்கு பின்னடைவு: எதிர்பாராமல் முன்னுக்கு வந்த சன் டிவி சீரியல்

TRP Rating for Week 19 (8Th May 2021 To Friday, 14Th May 2021) in tamil: கடந்த வாரங்களில் சன் மற்றும் விஜய் டிவிக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இந்த வாரத்தில் விஜய் டிவி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

Tamil tv TRP Rating in tamil : TRP Rating for Top 5 tamil serial in tamil

Tamil tv TRP Rating in tamil: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் தங்களுடைய ஆதாரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சில சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அதிக வரவேற்பு அளிக்கின்றனர்.

சின்னத்திரையில் மக்கள் அதிகம் ரசிக்கும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி ரேட்டிங் வராந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்திற்கான (மே 8 முதல் 14ம் தேதி வரை) டிஆர்பி ரேட்டிங் விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இதில் முந்தைய வாரம் தனது ஆதிக்கத்தை செலுத்திய சன் டிவி இந்த வாரமும் அதை தொடர்ந்துள்ளது. மேலும் நிகழ்ச்சி மற்றும் சீரியல் பட்டியலில் முதல் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்த பட்டியலில் 4வது முறையாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகிய நடிகர் விஜயின் ‘பிகில்’ திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வரிசையில் 2ம் இடத்தில் ரோஜா சீரியலும், 3ம் இடத்தில் வானத்தைப்போல சீரியலும் உள்ளன.

இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட டாப் 5 சேனல்களிலும் சன் டிவி வழக்கம் போல முதலிடத்தை தக்க வைத்துள்ளது. விஜய் டிவிக்கு எப்போதும் போல 2ம் இடம் தான் கிடைத்துள்ளது.

கடந்த வாரங்களில் சன் மற்றும் விஜய் டிவிக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இந்த வாரத்தில் விஜய் டிவி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. முந்தைய வாரத்தில் 3ம் இடத்தை தக்கவைத்த அந்த டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் இந்த வாரத்தில் 4ம் இடத்திற்கு சரிந்துள்ளது.

இதே போல் 18வது வாரம் வெளியிடப்பட்ட பட்டியலில் 5ம் இடத்தை தக்கவைத்த பாக்கியலட்சுமி சீரியல், இந்த வாரத்தில் லிஸ்டிலேயே இல்லை. அந்த இடத்தை தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil tv trp rating in tamil trp rating for top 5 tamil serial in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express