scorecardresearch

மாடர்ன் லவ் சென்னை, தி வில்லேஜ்… வரிசைகட்டும் தமிழ் வெப் சீரிஸ்கள்

தொடக்கத்தில் டப்பிங் சீரிஸ்கள் வெளியான நிலையில், தற்போது நேரடி வெப் சீரிஸ்கள் தமிழில் வெளியாக தொடங்கியுள்ளன.

மாடர்ன் லவ் சென்னை, தி வில்லேஜ்… வரிசைகட்டும் தமிழ் வெப் சீரிஸ்கள்

கொரோனா காலகட்டத்தில், வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்காக அமைந்தது ஒடிடி தளங்கள். அப்போது தியேட்டர்கள் இல்லாத காரணத்தால் பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்து தியேட்டர்கள் திறந்துவிட்டாலும், ஒடிடி தளத்திற்கு உண்டான மோகம் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே போல் முன்னணி நடிகர்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை விட ஒடிடி தளத்தில் வெளியாகி வரும் வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இல்லை என்றாலும், தற்போது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் வகையில் கதை தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறது. தொடக்கத்தில் டப்பிங் சீரிஸ்கள் வெளியான நிலையில், தற்போது நேரடி வெப் சீரிஸ்கள் தமிழில் வெளியாக தொடங்கியுள்ளன.   

அந்த வகையில் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான சுழல்: தி வோர்டெக்ஸ், த்ரில்லர் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இதன் மூலம் நேரடி வெப் சீரிஸ்கள் தமிழில் வெளியாக ஊன்றுகோளாக இருக்கும். மேலும் அடுத்து தமிழல் வெளியாகவிருக்கும் ஒடிடி வெப் சீரிஸ்களுக்கு பெரிய எதிர்பார்ப்ப எழுந்துள்ளது.

ஒடிடி தளங்களில் அடுத்து வரவிருக்கும் தமிழ் வெப் சீரிஸ்களின் விபரம்:

தி வில்லேஜ் அமேசான் பிரைம் வீடியோ

ஒரு கிராஃபிக் நாவலில் இருந்து எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகக் கூறப்படும் தி வில்லேஜ் வெப் சீரிஸ் மரபுபிறழ்ந்தவர்களின் குழுவால் தடை செய்யப்பட்ட சாலையில் பயணம் செய்யும் ஒரு குடும்பத்தின் கதையைச் பற்றியது. இதன் மூலம் ஆர்யா முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகிறார்.

வதந்தி அமேசான் பிரைம் வீடியோ

ஒரு இளம் பெண்ணின் மரணம் பற்றிய ஒரு தீவிரமான நார்-த்ரில்லர் கதையம்சத்தில் தயாராகியுள்ள இந்த வெப் சீரிஸ், ஒரு போலீஸ்காரர், எழுத்தாளர் மற்றும் ஒரு சந்தர்ப்பவாத பத்திரிக்கையாளர் ஆகியோரின் பார்வையில் கூறப்படும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. நாசர் மற்றும் சஞ்சனாவைத் தவிர, முன்னாள் நடிகரான லைலாவும் இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

பேப்பர் ராக்கெட் ஜீ5

முன்னதாக வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வாழக்கையில் மன உலைச்சலில் சிக்கியுள்ள சிலர் ஒன்றாக இணைந்து ஒரு பயணம் மேற்கொள்வதை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸின் கதை அமைக்கப்பட்டிருந்தது.  

மை 3 டிஸ்னி + ஹாட்ஸ்டார்

ஹன்சிகா மோத்வானி இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ள இந்த தொடரில் ஒரு கேரக்டரில் ரோபோவாக நடித்துள்ளார். மேலும் இது பிரபலமான தொடரா ஐ ஆம் நாட் எ ரோபோவின் ரீமேக் என்று கூறப்படுகிறது. 2012 திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடியை படத்தை தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி தனது இயக்குநர் ராஜேஷுடன் இந்த தொடரில் இணைந்துள்ளார்.

மாடர்ன் லவ் சென்னை அமேசான் பிரைம் வீடியோ

தமிழ் ஒடிடி தளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்று மாடர்ன் லவ் சென்னை.  சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவால் ஆதரவுடன் தயாராகும் இந்த வெப் சீரிஸ் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான மாடர்ன் லவ் தொடரின் ரீமேக்காகும்.

கிஷோர், ரம்யா நம்பீசன், அசோக் செல்வன், ரிது வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், சஞ்சுலா எஸ் ஆகியோர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் இது ஆறு வகையான காதல்களை அடிப்படையாக வைத்து ஒருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதை முழுவதும் சென்னையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil upcoming web series arya the village and modern love chennai