‘என்ன பண்றது சார்… எல்லாம் சிரிப்பா இருக்கு!’ மோடி பற்றி ஓவியா ட்வீட்

பிரதமர் மோடி குறித்த ரசிகரின் கேள்விக்கு நடிகை ஓவியா மீம் ஒன்றை பதிவிட்டு வித்தியாசமான முறையில் பதில் அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவியா, பிரதமர் மோடி குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதில் அளித்துள்ளார்.

தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான நாளை நமதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதனைத் தொடர்ந்து  களவானி என்ற ஹிட் படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர், முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, 90எம்எல், முனி 4 ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது ராஜ பீமா, சம்பவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இவரது நற்குணங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் ஓவியா ஆர்மி என்ற பெயரில்  பெரும ஆதரவு அளித்து வந்தனர். இந்த நிகழ்ச்ச்யில் நடிகர் ஆரவ்வுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டாலும், இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் குறைவில்லை. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதும் கிடைக்கவில்லை. சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஓவியா, அவ்வப்போது தனது புகைப்படங்களை  வெளியிட்டு வரும் நிலையில், சமூக பிரச்சனைகளுக்கு எதிரானவும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு ரசிகர்களுடன் உரையாடிய ஓவியா ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது,  ரசிகர் ஒருவர், நீங்கள் உங்கள் புகழை சரியாக பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஓவியா, . ‘இல்லை.. நான் அப்படி நினைக்கவில்லை’ என பதில் கூறினார் ஓவியா.தொடர்ந்து ஒரு ரசிகர் உன்னுடைய ரசிகனாக இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் என ட்விட் செய்ய ‘ஓகே’ என்று மட்டும் பதில் அளித்த ஓவியாவிடம்,  மோடி அரசு பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என மற்றொரு ரசிகர் கேட்டு இருந்தார்.

இந்த கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதில் அளித்துள்ள ஓவியா ஒரு மீமை பகிர்ந்துள்ளார். அதில் ‘என்ன பண்றது சார்.. எல்லாம் சிரிப்பா இருக்கு’ என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பதில் சமூக வலைதளங்களிவ் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கோ பேக் மோடி என ஓவியா வெளியிட்ட பதிவிற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil update actress oviya twitts meme about pm modi

Next Story
வில்லியாக இருந்தாலும் அவங்களும் மனுஷிதானே… நிறைவேறியது வெண்பா ஆசை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com