நடிகர் விஜய் தன்னுடன் நடித்த நடிகைகளை தரக்குறைவாக பேசியதாக நடிகர் ஷாம் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜூ தயாரித்து வருகிறார்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள வாரிசு படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் 3-வது முறையாக அஜித் இயக்குனர் எச்.வினோத் இணைந்துள்ள துணிவு படமும் அதே நாளில் வெளியாக உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது இரு தரப்பில் இருந்தும் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே வாரிசு படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் அவ்வப்போது பெரிய சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. அந்த வகையில் வாரிசு படம் குறித்து சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் ஷாம், எனது முதல் படமாக 12பி படத்தை பார்த்து விஜய், முதல் படத்திலேயே ஜோதிகா, சிம்ரன் என இரு குதிரைகளுடன் நடித்திருக்கிறாய் யார்ரா நீ என்று கேட்டதாக கூறியுள்ளார்
Casual ah olaritan Shyam 😂
— vinoth (@vinoth128) December 7, 2022
Jyotika, Simran nu rendu Kudhirai ah otitu varriye Yarra nee nu ketruakan porukki @actorvijay..
Waste behavior co actress la ipdi pesi vechirukan…#Thunivu #AjithKumar #ThunivuPongal #ChillaChilla pic.twitter.com/uYDuVMrXyK
ஷாம் இவ்வாறு கூறியது பெரும் வைரலாக பரவியதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய்க்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதேபோல் இயல்பாக பேசுவதாக கூறி நடிகர் ஷாம் இவ்வாறு கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil