வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த கதை ஏற்கனவே ரஜினிகாந்த் சொல்லிவட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு குஷ்பு, ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை வம்சி இயக்கியுள்ள நிலையில், தில் ராஜூ தயாரித்துள்ளார்.
பொங்கல் தினத்தில் அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இரு படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
4 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்த விழாவில் விஜய் என்ன குட்டிக்கதை சொல்ல போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி வைரலானது.
ஒரு வீட்டில் ஒரு அப்பா, அம்மா, தங்கச்சி, அண்ணா இருந்தாங்க. அப்பா எப்பவுமே இரண்டு குழந்தைகளுக்கும் தினமும் சாக்லேட் வாங்கி வருவாங்க. தக்கச்சி அந்த சாக்லேட்டை உடனே சாப்பிட்டுவிடுவாங்க. ஆனால் அண்ணன் அதை ஒளித்து வைப்பார். ஒரு நாள் தங்கச்சி அண்ணாவிடம் வந்து. அண்ணா அன்புனா என்னனு கேக்கும்போது. நீ எடுப்பனு தெரிஞ்சும் அதே எடத்துல சாக்லேட்டை ஒளிச்சு வைக்குறேன்ல. அதான் அன்பு. எனது ரசிகளின் அன்புதான் எனது போதை. உலகின் மிகப் பெரிய ஆயுதம் அன்பு” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ 1990-ம் ஆண்டு எனக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்தார். அவரை தோற்கடிக்கவே நான் வேகமாக ஓடினேன். அவர்தான் எனக்கு சவாலான போட்டியாளர். அவர்தான் ஜோசப் விஜய். எனக்கு நான்தான் போட்டியாளர்’ என்று கூறினார். தற்போது இந்த குட்டி ஸ்டேரி ரஜினிகாந்த் ஏற்கனவே சொல்லிவிட்டார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
படையப்பா படத்தின் வெற்றி குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் எனக்கு நான் தான் வில்லன். எனக்கு நான்தான் போட்டி. என் படங்களே எனக்கு எதிரி. மற்றவர்களின் படங்களை நான் போட்டியாக நினைப்பதில்லை. ஒரு படம் ஹிட் ஆனால் அடுத்த படம் அதைவிட பெரிய ஹிட் ஆக வேண்டும். தற்போது படையப்பபா ஹிட் ஆகிவிட்டது. அடுத்த படம் இதைவிட பெரிய ஹிட் ஆக வேண்டும். எனக்கு நான்தான் போட்டி என்று கூறியிருந்தார்.
தற்போது விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியுடன் ரஜினியின் வீடியோவை இணையத்து இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/