ஐஸ்கிரீம் நேரம்... பிரபல நடிகையுடன் அம்பிகா: த்ரோபேக் போட்டோஸ் வைரல்

1976-ம் ஆண்டு வெளியான சோட்டானிக்கரை அம்மன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சீனமாவில் அறிமுகமானவர் அம்பிகா.

1976-ம் ஆண்டு வெளியான சோட்டானிக்கரை அம்மன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சீனமாவில் அறிமுகமானவர் அம்பிகா.

author-image
WebDesk
New Update
Ambika

நடிகை அம்பிகா

80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அம்பிகா தற்போது சீரியல்கள் மற்றும் சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள த்ரோபேக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

1976-ம் ஆண்டு வெளியான சோட்டானிக்கரை அம்மன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சீனமாவில் அறிமுகமானவர் அம்பிகா. தொடர்ந்து, 1979-ம் ஆண்டு சக்காளத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அம்பிகா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள அம்பிகா, தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

தனது நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ள அம்பிகா, தனது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிலையில், அவ்வப்போது, திரைப்படத்தின் செட்களில் இருந்து த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறார். அந்த வகையில், சமீபத்தில், நடிகை நாஸ்டால்ஜியா பாதையில் பயணம் செய்தபோது எடுத்த தனது கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இரண்டு பெண்கள் ஐஸ்கிரீமை ருசித்து மகிழ்வதையும், அவர்கள் க்ளிக் செய்யப்பட்டபோது கேமராவுக்காக மகிழ்ச்சியுடன் புன்னகைப்பதையும் இந்த புகைப்படத்தில் காணலாம். ஐஸ்கிரீம் நேரம். நானும் இளவரசியும் நான் படும் பாடல் படப்பிடிப்பு நேரம். அவ்வளவு இனிமையான பெண். இந்தப் புகைப்படம் இப்போதுதான் கிடைத்தது. எனக்கு மகிழ்ச்சியை தந்தது என பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் இதயங்கள் மற்றும் கண்-இதய ஈமோஜிகளைப் பார்த்து பல பயனர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “அடடா! என்ன ஒரு புன்னகை! ஆஹா! என்றும், மற்றொருவர், "சூப்பர் என்றும் பதிவிட்டுள்ளனர்., மேலும் ஒருவர் "அழகானவர்" என்றும், தற்போது இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.

அம்பிகா பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மம்முட்டி, என்.டி.ராமராவ், கிருஷ்ணம் ராஜு, டாக்டர் ராஜ்குமார், அம்பரீஷ், சிரஞ்சீவி என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணநை்து நடித்துள்ளார். அம்பிகாவின் சகோதரி ராதாவும் அந்த நேரத்தில் பிரபல நடிகையாக இருந்தார். காதல் பரிசு போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: