/tamil-ie/media/media_files/uploads/2023/04/Vignesh.jpg)
அஜித்குமாரின் ஏகே 62 படத்தை இயக்க ஒப்பந்தமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் திடீரென அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். தமிழ் சினிமா வட்டாரத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.
துணிவு என்ற பெரிய வெற்றிப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்றும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலான அஜித் படத்தை தடம் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்திற்கு தற்போது பூஜை போடப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிகாரப்பூாவ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஏ.கே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல்முறையாக பேசியுள்ளார்.
இதில் படத்தின் தயாரிப்பாளருக்கு ஸ்கிரிப்ட்டின் இரண்டாம் பாதியில் திருப்தி இல்லாததால் பல விஷயங்களை மாற்ற வேண்டும் என்று என்று சொன்னார். ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை. “எல்லாவற்றையும் ஒருவர் கையாள வேண்டும் என்று நினைத்தேன். இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது உண்மையிலேயே ஏமாற்றம்தான். எனது ஸ்கிரிப்ட்டின் இரண்டாம் பாதியில் எனது தயாரிப்பாளர் திருப்தி அடையவில்லை என்பது தடையாக இருந்தது. ஆனால் எனது கதை அதுதான், என்னால் அதை மாற்ற முடியாது.
அஜித் சார் உடன், எல்லாம் நன்றாக இருந்தது, ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, ஸ்கிரிப்டில் சில விஷயங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை” எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பார்க்க வேண்டும், அஜித்தை வைத்து இயக்கவிருக்கும் மகிழ் திருமேனிக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி. படத்தை யார் இயக்கப் போகிறார்களோ... மகிழ் திருமேனி சார் நல்ல இயக்குநர். அவர் நல்லவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
மேலும் உங்களுக்கு விஷயங்கள் மிக விரைவில் நடக்கிறதா அல்லது தாமதமாக நடக்கிறதா என்பதை உங்களால் கணிக்க முடியாது என்று நினைக்கிறேன். எனக்கு இந்த படம் கொஞ்சம் சீக்கிரமே கிடைத்திருக்கலாம். சில நேரங்களில் நாம் வரிசையில் முன்னே செல்ல முனைகிறோம், அதே சமயம் வாய்ப்புக்காக பலர் காத்திருக்கிறார்கள். இங்கே, ஒரு நபர் ஒரு வாய்ப்பை இழக்கும்போது மட்டுமே, மற்றொருவர் அதைப் பெறுகிறார். இந்த வாய்ப்பை நான் இழந்ததால், மகிழ் திருமேனி போன்ற சூப்பர் திடமான இயக்குனர் அஜித் போன்ற ஒரு நட்சத்திரத்தை இயக்க இருக்கிறார். நான் அதை ஒரு நல்ல விஷயமாகப் பார்ப்பேன்."
எதிர்காலத்தில் அஜித்தை இயக்குவேன் என்று நம்புகிறேன். ஆனால் அது கூட நான் கற்பனை செய்த ஒரு ஸ்கிரிப்ட்டிற்காக இருக்கும். "இது மறுக்கப்படவில்லை, தாமதப்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய முதல் படம் நான் நினைத்தபடி நடக்கவில்லை. இப்போது, என் மனதுக்கு நெருக்கமான இன்னொரு படம் செய்கிறேன். நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். இருப்பினும், நானும் ரவுடி தான் போன்ற ஒரு வாய்ப்பு எனக்கு எப்போது கிடைக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். படம் ஓடவில்லை என்றால், அது பெரிய தோல்வி. நாளின் முடிவில், என் கதைதான் என்னைக் காப்பாற்றுகிறது, ”என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.