Advertisment

இறுதிக் கட்டத்தை நோக்கி விஜய் டி.வி சீரியல்... இவ்வளவு வேகமா போனது இதுக்குதானா?

விஜய் டிவியில் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதால் முக்கியமான பழைய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Bharathi Kannamam

பாரதி கண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் பழைய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வருவது விஜய் டிவி சீரியல்கள். கடந்த சில மாதங்களாக விஜய் டிவியின் சீரியல்கள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. எவ்வளர் சுவாரஸ்யமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், டிஆர்பியில் விஜய் டிவிக்கு கடைசி இடங்களே கிடைத்து வருகிறது.

இதனிடையே விஜய் டிவியில் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதால் முக்கியமான பழைய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடரான பாரதி கண்ணம்மா சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த சீரியலின் 2-ம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தை போலவே 2-ம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த வினுஷா தேவியே கண்ணம்மாவாக நடித்து வரும் நிலையில், ரோஜா சீரியல் புகழ் சுப்பு சூரியன் பாரதி கேரக்டரில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக திரைக்கதையாக இருந்தாலும் முதல் சீசன் அளவுக்கு பாரதி கண்ணம்மா சீசன் 2 டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிககம் செலுத்த முடியாமல் தத்தளித்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாரதி தனது வீட்டுக்கு தெரியாமல் கண்ணம்மாவை திருமணம் செய்துகொள்கிறார். இதனால் சௌந்தர்யா அவர் மீது கோபமாக இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா இருவருக்கு பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் இவர்களின் வாழ்க்கை எப்படி அமைய போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கி வரும் நிலையில், பாரதி கண்ணம்மாவின் டிஆர்பி வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் புதிய சீரியலான கிழக்கு வாசல் சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாக அதே நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளதால் பாரதி கண்ணம்மா முடிவுக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment