Advertisment

ஒரே நேரத்தில் முடிவுக்கு வரும் 4 நிகழ்ச்சிகள்... விஜய் டிவியின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

தற்போது ஒரே நேரத்தில் 4 நிகழ்ச்சிகள் முடிவடைய உள்ள நிலையில், ஒரே ஒரு புதிய நிகழ்ச்சி மட்டும் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது.

author-image
WebDesk
Jun 01, 2023 19:31 IST
Vijay TV Show

விஜய் டிவியின் 4 முக்கிய நிகழ்ச்சிகள் முடிவு

ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் 4 முக்கிய நிகழ்ச்சிகள் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முன்னணியில் இருப்பது விஜய் டிவி. அதேபோல் மற்ற சேனல்களை விட அதிகமான ரசிகர்களை பெற்றுள்ள விஜய் டிவி அவ்வப்போது பல புதிய ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதும் பழைய நிகழ்ச்சிகளை முடிப்பதும் வழக்கமான நடைபெறும் ஒரு நிகழ்வு. இதில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாகவும் இருந்துள்ளது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் 4 முக்கிய நிகழ்ச்சிகள் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டால் அதன் ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்தும் வகையில் அதே நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஒளிபரப்புவது விஜய் டிவியின் வழக்கம். அதேபோல் ஒரு நிகழ்ச்சி முடிந்தால் அதற்கு பதிலாக மற்றொ புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிவிடும்.

Cook With Comali

குக் வித் கோமாளி

ஆனால் தற்போது ஒரே நேரத்தில் 4 நிகழ்ச்சிகள் முடிவடைய உள்ள நிலையில், ஒரே ஒரு புதிய நிகழ்ச்சி மட்டும் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், கலக்கப்போவது யாரு உள்ளிட்ட 4 நிகழ்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் முடியடைய உள்ளது. இந்த 4 நிகழ்ச்சிகளுக்கு பதிலாக ரெடி ஸ்டடி போ என்ற ஒரு நிகழ்ச்சி மட்டும் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது.

புதிதாக ஒளிபரப்பாக உள்ள ரெடி ஸ்டடி போ என்ற நிகழ்ச்சியை ரக்ஷனும், பாக்யலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வரும் விஜே விஷால் ஆகிய இருவரும் தொகுத்து வழங்க உள்ளனர். அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment