விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ், தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர உள்ளது உண்மைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Advertisment
விஜய் டிவியின் பிரபல சீரியலானா பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா கணேஷ். தமிழக்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜேவாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார். சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் தனி ஆளாக போராடி வரும் பாக்யாவுக்கு அவ்வப்போது கைக்கொடுக்கும் கேரக்டரில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் திவ்யா கணேஷ் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். மேலும் சமூகவலைதளங்களிலும் இவரை பலர் ஃபோலோ செய்து வரும் நிலையில், இவர் வெளியிடும் பதிவுகளுக்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது திவ்யா கணேஷ், சன் டிவியின் புதிய சீரியலாக விரைவில் ஒளிபரப்பாக உள்ள அன்னம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அப்போ உண்மையாகவே பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர உள்ளதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ராஜலட்சுமியும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த திவ்யா கணேஷ் தற்போது தன்னுடன் பாட்டியையும் அழைத்துக்கொண்டு சன்டிவி சீரியலுக்கு தாவியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“