Advertisment

புது சீரியல் என்ட்ரி... விரைவில் முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி?

தற்போது எழில் அமிர்தா பிரச்சனை முடிந்துவிட்ட நிலையில், அடுத்து செழியன் – ஜெனி சேர்வது தான் கதை. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi Ser

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியில் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதால், பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய சீரியல் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல், அவ்வப்போது சலிப்பை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

கணவன் தனக்கெ தெரியாமல் விவாகரத்து பெற்று, தனது தோழியை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்தும், ஒரு பெண் தனது வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்று சமையல் பிஸினஸ் செய்கிறார். அதேபோல் வீட்டை விட்டு வெளியில் சென்ற கணவன் கோபி, ராதிகாவுடன் திரும்பவும், வீட்டுக்கு வர, அதன்பிறகு பாக்யா அந்த வீட்டை வாங்கி விடுகிறார்.

இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே போன கோபி மீண்டும் வீட்டுக்கு வர, அவர் பின்னாடியே ராதிகாவும் வந்துவிட்டார். இப்படி வந்த காட்சிகளே மீண்டும் வருவது, நாயகியான பாக்யா ஒரு பிரச்சனையை தைரியமாக சந்திக்காமல், கோழைத்தனமாக அழுதுகொண்டிருப்பது என ரசிகர்கள் மத்தியில் பாக்கியலட்சுமி கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது. அதேபோல் இறந்த அமிர்தாவின் கணவன் கணேஷ் மீண்டும் உயிருடன் வந்தது ரசிகர்கள் இந்த சீரியலை முடித்தவிடுங்கள் என்று சொல்லும அளவுக்கு இருந்தது.

தற்போது எழில் அமிர்தா பிரச்சனை முடிந்துவிட்ட நிலையில், அடுத்து செழியன் – ஜெனி சேர்வது தான் கதை. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இன்னும் சில வாரங்கள் இந்த சீரியல் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அடுத்து பனிவிழும் மலர்வனம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வினுஷா தேவி இந்த சீரியலில் நாயகியாக நடிக்கிறார்.

முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த சீரியலுக்கு வழிவிடும் வகையில் பாக்கியலட்சுமி முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment