/indian-express-tamil/media/media_files/Whov7Cv5IbKo2oAdXhCq.jpg)
செழியன் - ஜெனி விவாகரத்து
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அமிர்தாவின் கணவன் கணேஷ் பற்றி பாக்யா பேச வர அப்போ ஜெனியிடம் இருந்து டைவர்ஸ் நோட்டீஸ் வருகிறது. இதை பார்த்த செழியன் கதறி அழ, ஈஸ்வரி கோபத்தில் உச்சத்திற்கு செல்கிறார். உடனே கிளம்பு ஜெனியிடம் என்ன என்று கேட்டு வரலாம் என் சொல்ல, கொஞ்சம் பொறுமையா இருங்க அத்தை என்று பாக்யா சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி கேட்கவில்லை.
அதன்பிறகு செழியனை விட்டில் விட்டு விட்டு, ஈஸ்வரி மொத்த குடும்பத்துடன் ஜெனி வீட்டுக்கு சென்று, என்ன இனிமேல் வீட்டுக்கு வர கூடாது என்று முடிவு பண்ணிட்டீயா டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்க என்று கேட்க, அப்போது தான் ஜெனிக்கு விஷயம் புரிகிறது. இதற்கு அவள் ஏதோ பேச வர, அவளது அம்மா தடுத்துவிடுகிறார். அதன்பிறகு ஜெனியின் அப்பா செழியன் குடும்பத்தினரை மரியாதை இல்லாமல் பேசுகிறார்.
ஈஸ்வரியும் பதிலுக்கு பேச, அங்கே பிரச்சனை வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் கோபியை பார்த்து உங்கள் பையன் உங்களை மாதிரி தானே இருப்பான் என்று சொல்ல, ஈஸ்வரிக்கு கோபம் உச்சத்திற்கு செல்கிறது. டைவர்ஸ் பண்றதுண்ணா பண்ணிக்க, நாங்க செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஈஸ்வரி அங்கிருந்து கிளம்புகிறார்.
அவர்கள் போனவுடன், யாரை கேட்டு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புனீங்க என்று கேட்க, இனிமேல் எல்லா முடிவையும் நான் தான் எடுப்பேன் என்று அவளது அப்பா சொல்கிறார். அப்போது செழியன் ஜெனிக்கு போன் செய்ய, ஜெனியின் அப்பா போனை வாங்கி உடைத்துவிடுகிறார். இதனிடையே வீட்டுக்கு வரும் ஈஸ்வரி செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பற்றி பேச, கோபியும், அதுதான் சரி என்று பேசுகிறார்.
ஜெனி போனை எடுக்காததால் செழியன் ஜெனி வீட்டுக்கு கிளம்ப, அவனுடன் எழிலும் செல்கிறான். இந்த பிரச்சனைகளை நினைத்து மனதிற்கும் கஷ்டப்படும் பாக்யா, சற்று நேரத்தில் கொஞ்சம் ரிலாக்சாக உட்கார, கணேஷிடம் இருந்து போன் வருகிறது. இதை பார்த்து பாக்யா பதற, அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us