”சவுக்கு மரத்து அடியிலே சன்னி லியோன் மடியிலே” – சன்னிக்கு தங்கதுரை பிறந்தநாள் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு விஜய் டிவி காமெடியன் தங்கதுரை வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

உலக அரங்கில் ஆபாச பட நடிகையாக அறியப்பட்டவர் சன்னி லியோன். தற்போது அந்த துறையில் இருந்து விலகி இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் தற்போது கைவம் பல படங்களை வைத்துள்ள அவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது வீரமாதேவி என்ற படத்தில் வீரமங்கையான நடித்து வருகிறார்.

இந்நிலையில் சன்னி லியோன் நேற்று தனது 41-வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு சில திரைப்படங்களிலும், விஜய்டிவியில் காமெடியில் கலக்கி வரும், தங்கதுரை சன்னி லியோன் பிறந்த நாளுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘சவுக்கு மரத்து அடியிலே, சன்னி லியோன் மடியிலே’ என பாடல் பாடும் அவர் இரண்டு பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள தங்கதுரை “Happy Birthday Sunny Leon @sunnyleone savukku marathu adiyiley sunny Leon madiyiley” என தங்கதுரை குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil vijay tv comedian thangadurai wish to sunny leone video

Next Story
Baakiyalakshmi Serial: பொய் பொய்யாக சொல்லும் கோபி; என்னா நடிப்புடா சாமி!Baakiyalakshmi Serial, vijay tv, baakiyalakshmi serial today episode, baakiyalakshmi, விஜய் டிவி, பாக்கியலட்சுமி சீரியல், விஜய் டிவி சீரியல், பாக்யலட்சுமி சீரியல் கதை, பாக்கியலட்சுமி, கோபி, ராதிகா, அமிர்தா, எழிலன், vijay tv serials, tamil tv serials, baakiyalakshmi serial today story, today baakiyalakshmi serial, baakiyalakshmi, gopi, radhika, amirtha, ezhilan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com