விஜய் டிவி பிரபலமான பாலா தனது பிறந்த நாளில் அறந்தாங்கி அருகே முதியோர் இல்லம் ஒன்றுக்கு இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். இது குறித்து அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. தொடர்ந்து கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பாலா, தனது டைமிங் காமெடி மூலம் பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.
மேலும் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காக பயன்படுத்தும் பாலா சமீபத்தில் நடிகர் பாலா லட்சுமணன் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டு கால் விரல்களை இழந்த நிலையில், முன்னணி யாரை அவரை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் பாலா தன்னிடம் இருந்த 30 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்து இனி ஏதேனும் தேவைப்பட்டால் சொல்லுங்க என்று கூறிவிட்டு வந்துள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே தற்போது மேலும் பாராட்டுக்களை பெறும் வகையில் பாலா மேலும் ஒரு செயலை செய்துள்ளார். இவரும் இவரது நண்பரும் சேர்ந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பாலா தற்போது ஒருவருக்கு இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய 5 ஆண்டு கனவு தற்போது நனவாகிடுச்சி. எப்புடியாவது முதியோர் இல்லத்துல இருக்கிற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி குடுக்கணும்னு நெனச்சேன். ஆனால் என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேர்த்து வெச்சி எப்புடியோ சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துட்டேன்.
ஆஸ்பத்திரிக்கு செக்கப்புக்கு பெரியவங்க ஆட்டோல போக வேண்டாம். ஆம்புலன்ஸில் போகலாம். அது மட்டும் இல்லாம ஹோமுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் யாருக்கு அவசரம் என்றாலும் இந்த ஆம்புலன்ஸ் இலவசம். அதுக்கு பெட்ரோலையும் நான் இலவசமாகவே கொடுத்துடறேன். அனைவருக்கும் மிக்க நன்றி.
என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. உங்க எல்லாருடைய ஆதரவுலதான் என் கனவ சாதிக்க முடிஞ்சது லவ் யூ என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“