/tamil-ie/media/media_files/uploads/2022/04/VJ-Manimegalai.jpg)
Vijay TV Celebrity VJ Manimegala Theft Complaint : கடந்த 2010-ம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. தொடர்ந்து, கோலிவுட் டைரீஸ், இசையோடு விளையாடு, பாட்டு டாட் காம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், ஹூசைன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்திற்கு இருவரது வீட்டிலும் கடுமையாக எதிர்ப்புகள் இருந்தாதால், இருவரும் தனியாக வாழந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து சன்டிவியில் இருந்து 2019-ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.
அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகயாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மணிமேகலை, பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ள மணிமேகலை சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிடும் மணிமேகலை தற்போது தனது வீட்டில் இருந்து விலை உயர்ந்த பைக் ஒன்றை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டதாக பதிவிட்டு்ளார். மணிமேகலை சாமீப காலமாக பல விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவித்து வரும் நிலையில், இந்த திருட்டு சம்பவம் தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்களுக்கு சொந்தமான பைக்கை நண்பரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்தை பார்த்த மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர் என மணிமேகலை தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.