New Update
/indian-express-tamil/media/media_files/zInlATXXt5KstwyWWweB.jpg)
விஜய் டிவியின் புதிய சீரியல்
விஜய் டிவியில் அடுத்து ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரான நீ நான் காதல் சீரியலின் ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
விஜய் டிவியின் புதிய சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இன்றைய இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. இதன் காரணமாக டிவி சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல்களையும், ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் பழைய சீரியல்களையும் சுவாரஸ்யமாக்கி வருகின்றன.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்புக்கு தயாராகி வருகிறது. நகரத்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் தற்போது தொடங்க உள்ள புதிய சீரியல் நீ நான் காதல். தெலுங்கு சீரியலான நுவ்வு நேனு பிரேமாவின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்த சீரியல் வரும் நவம்பர் 13 அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் ஏற்கனவே பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பிரபலமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது 'நீ நான் காதல்' என்ற சீரியல் அந்த வரிசையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறது. காதல் கதை ஒரு தொழில் அதிபரைக் காதலிக்கும் ஒரு சிறிய நகரப் பெண்ணைச் சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ் மற்றும் நவீன் முரளிதர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதிகமான புதுமுகங்கள் நடத்து வரும் இந்த சீரியலில் நவீன் முரளிதர் நன்கு அறியப்பட்ட நடனக் கலைஞர், மிமிக்ரி கலைஞர் ஆவார். கலக்க போவது யார் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். பின்னர், பாவம் கணேசன் என்ற தொடரில் தொலைக்காட்சியில் அறிமுகமானார், மேலும் நவீன் சில படங்களிலும் நடித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.