விஜய் டிவியின் பொன்னி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பொன்னி. வைஷூ சுந்தர், சபரி நாதன் ஆகியோர் முன்னணி கேரக்டரில் நடித்து வந்த இந்த சீரியலில், ஷமிதா ஸ்ரீகுமார் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். மனோஜ் குமார் இயக்கி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பெங்காலி சீரியலான 'காட்சோரா'வின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தியுடன் திருமணத்திற்கு தள்ளப்பட்ட பொன்னி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு வரும் இந்த சீரியலில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் சக்தி அவளை எவ்வாறு தனது மனைவியாக ஏற்றுக்கொள்கிறார் என்பது குறித்து சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் கதை நகர்ந்து வருகிறது.
இந்த சீரியலில் முதலில், சமீர் அகமது நாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அவர் 'மோதலும் காதலும்' சீரியலில் நடிக்க சென்றதால், அவருக்கு பதிலாக சபரி நாதன் நாயகனாகவும், வைஷு சுந்தர் நாயகியாகும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இதில் சக்தியில் அம்மா ஜெயலட்சுமி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ஷமிதா ஸ்ரீகுமார் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
விஜய் டிவியின் 'மௌன ராகம்' சீசன் 1 இல் நடித்து வந்த ஷமிதா ஸ்ரீகுமார், 'பொன்னி' சீரியலின் மூலம் ரசிகர்களுக்கு ஆச்சரியமான திருப்பமாக இருந்தது. ஆனால் தற்போது நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் திடீரென வெளியேறியதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஷமிதா ஸ்ரீகுமார் ஜெயலக்ஷ்மி வேடத்தில் இருந்து விலகியதால், நடிகை சிந்துஜா ஜெயலட்சுமி கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பொன்னி' சீரியலில் சிந்துஜா ஜெயலட்சுமி கேரக்டரில் எப்படி நடிக்க போகிறார் என்பது குறித்து ரசிகர்களிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் வரும் நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“