முதல் மரியாதை யாருக்கு? பிரியங்கா, புகழ், மணிமேகலை, அர்ச்சனா போட்டி : வீடியோ

Tamil Reality Show : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Reality Show : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
முதல் மரியாதை யாருக்கு? பிரியங்கா, புகழ், மணிமேகலை, அர்ச்சனா போட்டி : வீடியோ

New Reality Show In Vijay TV : விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சிக்கான புரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் தொலைக்காட்சியில் இளைஞர்களின் பொழுதுபோக்கிற்கு தீனி போடும் சேனல் விஜய்டிவி. இந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. மேலும் தொலைக்காட்சியில் அதிக ரியாலிட்டி ஷோக்கள் நடத்தும் ஒரே டிவி விஜய் தொலைக்காட்சி. நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்த ஷோக்கள் மக்களுக்கு விருந்தாக அமைகிறது.

இதில் பார்வையாளர்ளை மேலும் அதிகரிக்கும் வகையில், விஜய் டிவி புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பரிவட்டம் மற்றும் எங்க வீட்டு மகாலட்சுமி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளைக் நடத்தி வருகிறது. இதில் தற்போது 3-வது நிகழ்ச்சியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment
Advertisements

இந்த நிகழ்ச்சிக்காக புரமோஷன்வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரமோவில், விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா, ரியோ ராஜ், மா கா பா, ஈரோட் மகேஷ், கோபிநாத், மணிமேகலை, ரக்ஷன், பிரியங்கா, புகழ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் பரிவட்டம் யாருக்கு என்பதில் அனைவரும் போட்டிப்போடும் போது இறுதியாக வரும் நீயா? நானா கோபிநாத் பரிவட்டம் நம்மில் ஒருவருக்குதான் என்று கூறி சமாதானப்படுத்துகிறார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Reality Show

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: