தற்போதைய சூழ்நிலையில், சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இளைஞர்கள் உட்பட பல தரப்பினரும் சீரியல் பார்பதில் ஆர்வம் காட்டுவது என்று சொல்லலாம். இல்லத்தரசிகள் மட்டுமே கொண்டாடி வந்த சீரியலுக்கு தற்போது இளம் தலைமுறையினரும் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் சினிமாவை காட்டிலும் சீரியல் நடிகைகள் தங்களது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதும் அவர்களுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணம் என்று சொல்லாம். மேலும் சீரியல் பார்ப்பது மட்டுமல்லாமல் அந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்களின் தனிப்பட் தகவல்களை தெரிந்துகொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
சுசித்ரா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். தமிழில் சைவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சுஜித்ரா தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 12000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
நக்ஷத்திரா நாகேஷ்:
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் சரஸ்வதியாக நடித்து வரும் இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சன் டிவி சீரியல்களில் நடித்து வந்த நக்ஷத்ரா தற்போது விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் 10,000 வழங்கப்படுகிறதாம்.
வினுஷா தேவி
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாதியில் இணைந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வினுஷா தேவி தற்போது 2-வது சிசனிலும் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 8000 சம்பளம் பெறுகிறாராம்.
ரேஷ்மா பசுபுலேட்டி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் வேலையின்னு வந்துவிட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியலுக்காக ரேஷ்மாவிற்கு ஒரு நாளைக்கு சம்பளம் 7 ஆயிரம் வழங்கப்படுகிறதாம்.
சுஜிதாதனுஷ்
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி சீரியலில் நடித்து வரும் சுஜிதாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.