Vijay TV Serial Tamil News : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த நிலையில், தற்போது அரசின் தீவிர நடவடிக்கையால் வெகுவாக குறைந்துள்ளது. ஆனாலும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சினிமாத்துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. அதில் முக்கியமாக சீரியலுக்கு பெயர்போன டிவியாள விஜய் டிவியின் சீரியல்கள் நிறுத்தப்பட்டது. மேலும் தற்போது ஒளிபரப்பாகும் ஒருசில சீரியல்களும், நேரத்தை கடத்த மற்ற சீரியலுடன் இணைத்தும், டைட்டில் பாடல்கள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டு நேரத்தை கடத்தி வருகின்றனர். அப்படி இருந்தும் தற்போது பல சீரியல்களின் எபிசோடுகள் காலியானதால், சன் டிவியை போல விஜய் டிவியும் பழைய சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.
இது குறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த மான சீரியல்களை மறுஒளிபரப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் பலர் மகாபாரதம் தொடரை ஒளிபரப்ப சொன்னார்கள். இப்படி ஒரு நிலையில் வரும் திங்கள் முதல் காலை 10 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை மகாபாரத தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால் தற்போது சீரியல்களுக்கு கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம் என்று தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சீரியல் ஷூட்டிங் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil