/indian-express-tamil/media/media_files/2025/06/20/super-singer-pushpavana-2025-06-20-20-26-42.jpg)
கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், சிறப்பு நடுவராக பங்கேற்றிருந்த பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, மேடையில் கருப்புசாமி பாடலை கேட்ட சாமி வந்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி முன்னணியில் இருந்து வரும் சேனல் விஜய் டிவி. இதில் நடத்தப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதில் சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர், என பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பக்தி பாடல்களுக்கென தனி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நடுவராக பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி நன்றாக சென்றுகொண்டிருந்தபோது, அபிராமி என்ற போட்டியாளர் அங்கே இடி முழங்குது என்ற கருப்புசாமி பாடலை பாடி அசத்தியிருந்தார். இந்த பாடலுக்கு ஸ்டேஜில் இருந்த அனைவருமே கைத்தட்டி ஆராவாரம் செய்தனர்.
குறிப்பாக செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிலையில், அவர்களும், இந்த பாடலுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த பாடலை அபிராமி பாடி முடித்தவுடன் ஸ்டேஜிக்கு வந்த பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, சாமி ஆடினார். அங்கிருந்தவர்கள் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிலையில், சாமியை மலையேற்றுவதற்காக, குப்புசாமி நெற்றியில் வியூதி இட்டபோது, அவர் ஆக்ரோஷமாக கத்தினார்.
இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பதிவிட்ட கபிலன் என்ற நபர், என்னடா இது கருப்பசாமி டிவி செட்டுக்குள்ள எல்லாம் வர்றாரு உங்க மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா ?? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு கீழ் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்னடா இது கருப்பசாமி டிவி செட்டுக்குள்ள எல்லாம் வர்றாரு உங்க மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா ?? pic.twitter.com/pbmyBzabbK
— கபிலன் (@_kabilans) June 20, 2025
அது சாமி இல்லப்பா அது உணர்வு சித்த மருத்துவத்தில் குறிப்பிட்டது அது பெயர் வெறி ஆடுதல்
— Sakthi Vel (@SakthiVel188331) June 20, 2025
பக்தி நிகழ்ச்சிகள் என்ற பெயரில் குழந்தைகளின் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் கும்பல் இது.
— Jeeva (@Jeeva_Jeevanss) June 20, 2025
மூடநம்பிக்கை என்றால் அறியாமையில் செய்வது போலாகிவிடும்... இவனுங்க தெரிந்தே மக்களை ஏமாற்றுகிறார்கள்...
— திராவிட நேசன் (@Dravida_Nesan) June 20, 2025
மூடநம்பிக்கைங்கறதுலாம் ரெண்டாவது கருப்பசாமிலாம் வந்து இறங்குனா ஒரு ஆளு புடிச்சு நிறுத்த முடியுமா ?? டிராமாக்கு ஒரு அளவு வேணாமா பக்தினு ஒன்னு இருக்குங்கறதுக்காக போறவரவன்லாம் மடியை புடிச்சு கறக்குறானுங்களே
— எரித்ரேயன் 🖊️ (@erytheraean) June 20, 2025
இந்த ட்ரோல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சாமி வருவது இயல்பு என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.