புதிய சீரியல்களின் வரவை தொடர்ந்து விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியலிகளின் டெலிகாஸ்ட் டைம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பழைய சீரியல்கள் ஒருபுறம் பட்டையை கிளப்பி வரும் நிலையில், அவ்வப்போது புதிய சீரியல்களும் களமிறங்கிய ரசிகர்களை மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர். இந்த சீரியல்களின் வெற்றிக்கு பரபரப்பான திரைக்கதை மட்டுமல்லாமல் அவற்றின் டைட்டில்களும் முக்கிய காரணமாக உள்ளது.
வெள்ளித்திரையில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களில் பெயர்களை சீரியலுக்கு பயன்படுத்தும் வழக்கத்தை கொண்டு வந்த பெருமை விஜய் டிவிக்கு உண்டு. அப்படி படங்களின் டைட்டிலை பயன்படுத்தி வெளியான சீரியல்கள் விஜய் டிவிக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. தற்போது படங்களின் பெயர்களை பயன்படுத்துவது சற்று குறைந்துள்ள நிலையில், புதிய சீரியல்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் அடுத்து பொன்னி, மற்றும் ஆஹா கல்யாணம் உள்ளிட்ட இரண்டு தொடர்கள் புதிதாக டெலிகாஸ்ட் ஆக உள்ளது. இந்த சீரியல்களில் ப்ரமோக்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த புதிய தொடர்கள் வர உள்ளதால் வரும் மார்ச் 20-ந் தேதி முதல் தமிழும் சரஸ்வதியும் மற்றும் ராஜா ராணி 2 ஆகிய தொடர்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மார்ச் 20 முதல், மாலை 6 மணிக்கு தமிழும் சரஸ்வதியும், 6.30 மணிக்கு ராஜா ராணி 2, 7 மணிக்கு ஆஹா கல்யாணம் ஆகிய தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“