குழந்தைக்கு அப்பாவாக திரவியம்... ''வீட்டுக்கு வீடு வாசப்படி'' சீரியல் ஆரம்பம் எப்போது?

விஜய் டிவியின் புதிய சீரியலான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் புதிய சீரியலான வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
VVP Thiraviyam

சின்னத்திரையில் அவ்வப்போது பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவதும் புதிய சீரியல்கள் ஒளிபரப்பை தொடங்குவதும் வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் சன்டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக இரு சேனல்களிலும் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவது தொடந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் திரவியம். கிராமத்து பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பான இந்த சீரியல்  பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், நடிகர் திரவியமும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். இதன் காரணமாக ஈரமான ரோஜாவே சீரியலின் 2-ம் பாகத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஈரமான ரோஜாவே சீரியலின் 2-ம் பாகம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து திரவியம் தற்போது புதிய சீரியலில் நடித்து வருகிறார். வீட்டுக்கு வீடு வாசப்படி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் அபி குழந்தையாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் அப்பாவாக திரவியம் நடிக்கிறார். வழக்கம்போல் குடும்ப உறுபபினர்களை சுற்றி நடக்கும் கதையான இந்த சீரியலின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisment
Advertisements

அதனைத் தொடர்ந்து இந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 22-ந் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதன் காரணமாக ‘’ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: