‘இந்த பொண்ணு அம்மா மாதிரியே இருக்கு’ மைனா நந்தினி சீரியல் நடிப்பை ரசிக்கும் குட்டி மகன்

Viral news in Tamil, Myna’s son wathching her serial : வேலைக்காரன் சீரியலில் மைனா நடிக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளார். அதில் ‘இது ஒரு லவ்லி தருணம், என் மகன் நான் நடிக்கும் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனோட மைண்ட் வாய்ஸ் என்னன்னா, என்ன இது அம்மா மாதிரியே இருக்கு, என் மகன் துருவனுக்கு நன்றி’

விஜய் டிவியின் பல்வேறு சீரியல்களில் நடித்து வருபவர் நந்தினி. பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ’மைனா’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினியாக அழைக்கப்படுகிறார்.

நந்தினி, கலக்க போவது யாரு, கலக்கபோவது யாரு சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இவர் கலந்துக் கொள்வார்.

மேலும் ஜீ தமிழ், கலைஞர் தொலைக்காட்சி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். 

இவரது கணவர் யோகியும் இவருடன் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. மகன் துருவனுடன் மைனா எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட்டினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது, சித்து மற்றும் ஆல்யா மானசா நடிக்கும் ’வேலைக்காரன்’  தொடரில் நந்தினியும் நடித்து வருகிறார்.

தற்போது தனது மகன் துருவன், வேலைக்காரன் சீரியலில் மைனா நடிக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளார். அதில் ‘இது ஒரு லவ்லி தருணம், என் மகன் நான் நடிக்கும் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனோட மைண்ட் வாய்ஸ் என்னன்னா, என்ன இது அம்மா மாதிரியே இருக்கு, என் மகன் துருவனுக்கு நன்றி’  என்றும் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil viral news mynas son watching her serial

Next Story
புதிய சீரியலில் ‘தெய்வமகள்’ அண்ணியார்: உடன் நடிப்பது யாரெல்லாம் பாருங்க!sun tv deivamagal serial fame rekha krishnappa, actress rekha krishnappa acting in new serial, தெய்வமகள் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா, தென்றல், தென்றல் சீரியல், தெய்வமகள், விஜய் டிவி, சன் டிவி, தீபக் தினகர், vijay tv, thendral serial fame deepak dinkar acting in new serial, tamil serial news, tamil tv serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com