புகை, மது பழக்கமே இல்லை; சூர்ய நமஸ்காரம் வழக்கம்: புற்றுநோயால் மரணமடைந்த வி.ஜே. ஆனந்த கண்ணன் மனைவி உருக்கம்!
ரொம்ப ஆரோக்கியமாக நபர். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் எதுவும் அவருக்கு கிடையாது. ஆனால் இளம் வயதில் ஏன் இப்படி புற்றுநோய் வருகிறது என்று தெரியவில்லை.
ரொம்ப ஆரோக்கியமாக நபர். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் எதுவும் அவருக்கு கிடையாது. ஆனால் இளம் வயதில் ஏன் இப்படி புற்றுநோய் வருகிறது என்று தெரியவில்லை.
90-எஸ் கிட்களில் ஃபேவரெட் தொகுப்பாளராக இருந்து சிந்துபாத் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகரும் தொகுப்பாளருமான ஆனந்த கண்ணன், எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாமல் புற்றுநோய்க்கு ஆளாகிவிட்டார் என்று அவரது மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்
Advertisment
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவராக ஆனந்த் கண்ணன், அங்கு வசந்தம் சேனலில் நடிகர் மற்றும் தொகுப்பாளராக தனது டீன்ஏஜ் வயதில் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுகளில், சன் மியூசிக்கில், தொகுப்பாளராக களமிறங்கிய இவர், சன்டிவியில் சிந்துபாத் என்ற சீரியலில் சிந்துபாத் கேரக்டரில் நடித்து அசத்தினார். சரோஜா படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்த இவர், அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்கள் பலரையும் பேட்டி எடுத்துள்ள ஆனந்த் கண்ணன், கடந்த 2021-ம் ஆண்டு ரத்த புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் 90-எஸ் குழந்தைகள் மத்தியில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே சமீபத்திய நேர்காணலில், ஆனந்த கண்ணனின் மனைவி ராணி, தனது கணவர் குறித்து உருக்கமான பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவருக்கு முதலில் புற்றுநோய் என்பதே எங்களுக்கு தெரியாது. கேஸ்ட்ரபுள் மாதிரி தான் இருந்தது. தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது, சூர்யநமஸ்காரம் செய்வது, போன்ற பழக்கங்கள் அவருக்கு வழக்கம். அதனால் புற்றுநோய் சந்தேகம் எங்களுக்கு வரவில்லை. கேஸ்ட்ரபுள் என்று நினைத்து என்டோஸ்கோப் எல்லாம் போட்டு பார்த்தோம். நார்மலாக இருந்தது. அப்போதுதான் அவருக்கு, முழு செக்கப் செய்யும்போது புற்றுநோய் இருப்பதும், அது லிவரை பாதித்ததும் தெரிந்தது
Advertisment
Advertisements
இதை கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் இதில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்று நினைத்து பயணிக்க தொடங்கினோம். ஆனால் அந்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இப்போதும் அவர் இல்லை என்று நினைக்கவில்லை. நாங்கள் சிங்கப்பூரில் இருக்கும்போது அவர் இந்தியாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார். வந்துவிடுவார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
ரொம்ப ஆரோக்கியமாக நபர். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் எதுவும் அவருக்கு கிடையாது. ஆனால் இளம் வயதில் ஏன் இப்படி புற்றுநோய் வருகிறது என்று தெரியவில்லை. 10வயது 12 வயது பிள்ளைகளுக்கு எல்லாம் இந்த நோய் தாக்கம் இருக்கிறது. இதை தடுக்க முடியும் என்று என் கணவர் இறந்தவுடன் ஆறுதல் சொன்ன பலர் என்னிடம் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்கும்போது கடவுள் மீது கோபம் வருகிறது.
எவ்வளவோ தப்பி பண்ணிட்டு, அக்கிரமம் பண்ணிட்டு துரோகம் பண்ணிட்டு இருக்கிறவர்கள் நல்லா இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் செய்யாத இவர்களுக்கு ஏன் இப்படி என்ற கேள்வி என்னுள் இருக்கிறது. ஆனால் புற்றுநோய் இருக்கிறது என்று தெரிந்தபின்னும் அவர் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் அவரை எந்த அளவுக்கு வந்தோஷமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினோம் என கூறியுள்ளார்.